Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,616.44
-327.24sensex(-0.45%)
நிஃப்டி22,022.45
-125.45sensex(-0.57%)
USD
81.57
Exclusive

Venture Capital Firms: இந்தியாவில் உள்ள சிறந்த 'விதை' முதலீட்டு நிறுவனங்கள்..

Nandhinipriya Ganeshan September 17, 2022 & 17:20 [IST]
Venture Capital Firms: இந்தியாவில் உள்ள சிறந்த 'விதை' முதலீட்டு நிறுவனங்கள்..Representative Image.

இந்தியாவில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இவ்வெற்றியை பறைசாற்றும் விதமாக, உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இம்மாபெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது 'விதை முதலீட்டாளர்கள்' என்று சொன்னால் அது மிகையாது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில ஸ்டார்ட்அப்கள் என்று தொடங்கப்பட்ட இப்பயணம் தற்போது ஆயிரக்கணக்கான புதுமையான முயற்சிகளின் தொகுப்பாக வளர்ந்து நிற்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலீட்டாளர்களால் தான் இந்திய ஸ்டார்ட்அப்கள் வளர்ந்து வருகின்றன.

நிதி எவ்வளவு முக்கியமானது? 

ஒரு சிறந்த யோசனையுடன் கூடிய மிகச் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூட, போதுமான நிதி இல்லாததால், அவற்றின் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்து விடுகின்றன. ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு வணிகங்கள் வளர்ச்சி நிலையை அடைந்தவுடன், அவற்றை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல பணம் தேவைப்படுகிறது. முன்பெல்லாம், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மட்டுமே சிறு வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு நிதி வழங்கிக் கொண்டிருந்தன.  

ஆனால், இப்போது பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி துணிகர மூலதன நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சிக்கு நிதியுதவிகளை வழங்கிவருகின்றன. அந்தவகையில், 650 க்கும் மேற்பட்ட துணிகர முதலீட்டாளர்கள் இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் தங்கள் பங்கேற்பைக் காட்டியுள்ளனர். அவற்றில் சிறந்த 10 முதலீட்டு நிறுவனங்களை பற்றி பார்க்கலாம். 

Accel 

ஆக்செல், (முன்பு ஆக்செல் பார்ட்னர்ஸ் என்றும் அழைக்கப்பட்டது) இந்தியாவின் பழமையான முக்கியமான முதலீட்டு நிறுவனங்களில் ஒன்று. கலிபோர்னியாவை சேர்ந்த இந்த VC நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் செயல்பட்டுவருகிறது. இதுவரை 1400 ஸ்டார்ட்அப்  நிறுவனங்களுக்கு நிதியளித்துள்ளது. Accel பார்ட்னர்ஸில் முதலீட்டுத் தொகையானது நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்து $500K முதல் $50 மில்லியன் வரை இருக்கும். மேலும் Slack, Facebook, Freshworks, Flipkart, Swiggy மற்றும் BookMyShow போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதியளித்துள்ளது. 

Website: https://www.accel.com/

Sequoia Capital

Sequoia கேபிட்டல், 1972 ஆம் ஆண்டு டான் வாலண்டைனால் நிறுவப்பட்ட தொழில்துறையில் நன்கு அறியப்பட்ட VC நிறுவனம் ஆகும். இது ஆரம்ப, விதை மற்றும் வளர்ச்சி நிலையில் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றது. இந்த இந்த VC நிறுவனம் ஆப்பிள் மற்றும் கூகுள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் பைஜூஸ், ஜஸ்ட்டெயில், ஜொமாட்டோ, ஓயோ, ஓலா மற்றும் மு சிக்மா ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளனர். 

Website: https://www.sequoiacap.com/india/

Blume Ventures

2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ப்ளூம் வென்ச்சர்ஸ் இந்தியாவின் முன்னணி துணிகர மூலதன நிறுவனங்களில் ஒன்றாகும். இது 'நிறுவனர்களின் VC' என்றும் அழைப்பர். தொடக்க நிதியளிப்பில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன், வரவிருக்கும் தொழில்முனைவோருக்கு முழுமையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகின்றது. ப்ளும் வென்ச்சர்ஸ் இதுவரை 60 க்கும் மேற்பட்ட வெவ்வேறு தொடக்கங்களுக்கு சாத்தியமான யோசனைகளுடன் நிதியளித்துள்ளது. மேலும், கேஸிஃபை, அனாகாடமி, ஹெல்திஃபைமி, லோகஸ், இன்ஸ்டாமோஜோ, இன்விடியோ, பிலாங்க் மற்றும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

Website: https://blume.vc/

Kalaari Capital

கலாரி கேபிட்டல், வாணி கோலாவால் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவில் நம்பகமான துணிகர மூலதன நிறுவனமாகும். இவர்கள் முதன்மையாக தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களில் ஆரம்ப மற்றும் விதை நிலைகளில் முதலீடு செய்கிறார்கள். கலாரி கேபிடல் ஸ்டார்ட்அப்களுக்கு போதுமான நிதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இளம் தொழில்முனைவோருக்கு பயனுள்ள வணிக தீர்வுகளுக்கு உதவ நம்பகமான ஆலோசனைக் குழுவையும் கொண்டுள்ளது. இதுவரை நிறுவனம் 183 தொடக்கங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும், ஸ்னாப்டீல், ஸ்கூப் வூப், மைந்த்ரா, அர்பன் லேடர், இன்ஸ்டாமோஜோ மற்றும் பல நிறுவனங்களீல் முதலீடு செய்துள்ளது. 

Website: https://www.kalaari.com/

Nexus Venture Partners

நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ், இந்தியாவின் முன்னணி துணிகர மூலதன நிறுவனங்களின் பட்டியலில் உள்ள மற்றொரு பெயர். இவர்கள் சிறு வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களில் $500,000 முதல் $10 மில்லியன் வரை முதலீடு செய்கின்றனர். இவை முதலீடு செய்த நிறுவனங்கள் என்று பார்த்தால் கிராஃப்ட்ஸ்வில்லா, ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ் போன்றவை. 

100X.VC

மும்பையை சேர்ந்த இந்த விசி, அனைத்து துறைகளில் இருக்கும் ஸ்டார்ட்அப்களை தயார்படுத்த உதவு செய்கிறது. இந்தியா சேஃப் குறிப்புகளைப் 'SAFE Notes'  பயன்படுத்தி ஆரம்ப கட்ட ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் முதல் துணிகர நிதி இதுவாகும். க்ளினிஃபை இந்தியா, க்விஸி, டாக்கி மற்றும் பவர்போட் உள்ளிட்ட சுமார் 28 நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டுள்ளனர்.

Website: https://100X.vc 

Elevation Capital

எலிவேஷன் கேபிட்டல், இதற்கு முன்பு சைஃப் பார்ட்னர்ஸ் 'SAIF partners' என்று அழைக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதல் முதலீடு செய்து வருகிறது. மேலும் இந்தியாவின் வெற்றிகரமான VC நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எலிவேஷன் கேபிடல், ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு தனியார் பங்கு நிறுவனமாகும். சீனா மற்றும் இந்தியாவை தலைமையிடமாக இந்த விசி நிறுவனம், அக்கோ, கிளியர்டாக்ஸ், ஃபாம்பே, மீஷோ மற்றும் ஃபர்ஸ்ட் க்ரை போன்ற பல இந்திய ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளனர்.

Website: https://elevationcapital.com/

Matrix Partners

1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்துவருகிறது. 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா, நுகர்வோர் தொழில்நுட்பம், பி2பி, எண்டர்பிரைஸ், ஃபின்டெக் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்கிறார்கள். இதுவரை 60 க்கும் மேற்பட்ட முதலீடுகளை கொண்டுள்ளனர். மேலும், லைம்ரோட், ஹவுஸ்ஜாய், ஓலா, எம்ஸ்வைப், Razorpay, Crejo, Oziva, Antwak மற்றும் பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளனர். 

Website: https://matrixpartners.in/

3one3 Capital

3one4 கேபிடல் என்பது புகழ்பெற்ற முதலீட்டாளரான மோகன்தாஸ் பாயின் மகன் தொடங்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய துணிகர மூலதன நிறுவனம் ஆகும். 50 க்கும் மேற்பட்ட முதலீடுகளுடன், நிறுவனங்களில் மூலதனத்தை முதலீடு செய்வதோடு மட்டுமல்லாமல், நிறுவனர்களின் முக்கிய வணிக சிக்கல்களை தீர்ப்பதிலும் உதவி வருகின்றனது. மேலும், ஃபேர்சென்ட், லைசியஸ், i2e1, டிரிபோட்டோ, யுவர்ஸ்டோரி போன்ற நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டுள்ளனர். 

Fidelity Growth Partners

ஃபிடிலிட்டி க்ரோத் பார்ட்னர்ஸ், ஃபிடிலிட்டி இன்டர்நேஷனல் லிமிடெட்டின் பிரைவேட் ஈக்விட்டி பிரிவாகும். இப்போது எயிட் ரோட் வென்ச்சர்ஸ் என்று தங்களது பெயரை மாற்றியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்பம், நுகர்வோர் பிராண்டுகள் மற்றும் உற்பத்தி போன்ற பல துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். பொதுவாக நிறுவனத்தின் முதலீட்டுத் தொகையானது தொடக்கத்தின் தன்மையைப் பொறுத்து $10M முதல் $50M வரை இருக்கும். மேலும், சிப்லா, லாரஸ் லேப்ஸ், சாய் பாயிண்ட், பேங்க்பஜார், டாப்பர், ஷேடோஃபாக்ஸ் மற்றும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். 

Website: https://eightroads.com/en/


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்