Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Makkal Nalam Bot: அனைத்து அரசுத் திட்டங்களையும் துல்லியமாக அறிய வருகிறது ‘மக்கள் நலம் பாட்’ ..

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 11:45 [IST]
Makkal Nalam Bot: அனைத்து அரசுத் திட்டங்களையும் துல்லியமாக அறிய வருகிறது ‘மக்கள் நலம் பாட்’ ..Representative Image.

நமது நாட்டில் அரசாங்காத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை அடையாளம் கண்டு, உறுதி செய்வதற்காக, ஏராளமான பொதுமக்கள் அரசு அலுவலங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது, நமது அரசாங்கத்தால் வெளியிடப்படும் திட்டங்களை எளிதில் தெரிந்துக் கொள்ளும் விதமாக ஒரு மெய்நிகர் சேட் வசதியை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக “GovTechThon” என்ற போட்டியையும் அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு தங்களது தீர்வுகளை வழங்கினார்கள். அந்த வகையில், கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆர்.எஸ்,சிவ சுப்பிரமணியன், ஆர். அஜித்குமார், டி. வெங்கடேஷ் என்ற மூன்று பேர் இணைந்து அடிப்படை டெலிகிராம் சாட்பாட் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். இதன் பெயர் ‘மக்கள் நலம் பாட்’ [Makkal Nalam Bot].

இந்த மென்பொருள் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 132 க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களை பற்றி எளிதில் அறிந்துக் கொள்ளலாம். இதனை அறிய பயனர் அவரது பாலினம், வருமானம், வயது பற்றிய விவரங்களை பதிவிட வேண்டும்.

இந்த மென்பொருள் முழுக்க முழுக்க தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆதார் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்பட மாட்டாது என்று வடிவமைப்பாளர்களில் ஒருவரான சிவா கூறியுள்ளார்.

இந்த முயற்சி எப்படி மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு வரும் காலத்தில் பிற மொழிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் ஆகியவற்றை சேர்க்கவுள்ளதாகவும் குழு தெரிவித்துள்ளது.

Tags:

Makkal nalam bot | Virtual assistant chatbot


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்