Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ரூ.10 லட்சம் மானியத் தொகை…! எப்படி விண்ணப்பிப்பது.. முழு விவரங்களும் இங்கே..!

Gowthami Subramani August 15, 2022 & 15:45 [IST]
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ரூ.10 லட்சம் மானியத் தொகை…! எப்படி விண்ணப்பிப்பது.. முழு விவரங்களும் இங்கே..!Representative Image.

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழக அரசு TANSEED என்ற மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கக் கூடிய திட்டமாகும். இது தமிழ்நாடு அரசாங்கத்தின் MSME துறையின் கீழ், கொள்கை செயலாக்க முகவராக செயல்படுகிறது.

அதன் படி, தமிழகத்தில் பதிவு செய்துள்ள அல்லது பதிவு செய்து கொள்ள விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழக அரசின் நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு புது தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான TANSEED என்ற இந்த மானியத் திட்டத்தின் மூலம், இதுவரை மூன்று முறை அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 60 நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.

இவ்வாறு, தற்போது நான்காவது கட்ட நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை TANSEED வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

TANSEED திட்டத்தின் மூலம், நிதி உதவி பெற விரும்பும் நபர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அடிப்படைத் தகுதிகள்

சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக இயங்கும் நிறுவனங்கள், புத்தாக்க சிந்தனையோடு இயங்கக் கூடிய நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இயங்கக் கூடிய நிறுவனங்கள், மானிய நிதிக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் நிறுவனங்கள், Startup TN மற்றும் Startup India-வில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும், இதில் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும் அல்லது, தமிழ்நாட்டிற்கு இடம் பெயர தயாராக இருக்கும் நிறுவனங்களாக விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இணைந்து மானியம் பெற விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள், TANSEED-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்கு செல்லவும்.

https://startuptn.in/

அதன் TANSEED 4.0 தளத்தின் முகப்புப் பக்கத்தில் சென்று, Apply Now என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைச் சமர்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்