Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்.. சாத்தியமா?

Nandhinipriya Ganeshan September 17, 2022 & 14:20 [IST]
அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்.. சாத்தியமா?Representative Image.

மல்டி பிராண்ட் இ-காமர்ஸ் நிறுவனமான டி2சி இகாமர்ஸ் 'D2C Ecommerce', கிரீன்சோல் பிராண்டின் நிறுவனரான ரவி குஷ்வானி மற்றும் பிற தொழில்வல்லுநர்களிடம் இருந்து ரூ.6 கோடியை விதை நிதியாக பெற்றுள்ளது. ஐஐஎம்-ஏ பட்டதாரியான மணீஷ் குப்தா என்பவரால் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. d2csale.com என்ற இணையதளம் மூலம் அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா, ஸ்னாப்டீல் போன்ற பிரபல ஆன்லைன் சாப்பிங் தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களை மலிவு விலையில் இந்த ஸ்டார்ட்அப் விற்பனை செய்து வருகின்றது. 

தொடங்கப்பட்டு குறைந்த நாட்களே ஆவதால், தற்போது அழகுசாதனப் பொருட்கள், உடைகள், உபகரணங்கள், புத்தகங்கள், உணவு கேஜெட்டுகள், மற்றும் சில பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. 

ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் விதமாக இந்த தளம் செயல்பட்டு வருவதால், கூடிய விரைவில் பெரிய ஆன்லைன் சாப்பிங் நிறுவனங்களுக்கு போட்டியாக வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்