Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வெற்றி விகிதமே அதிகம்…! மத்திய அமைச்சரின் கருத்து..!

Gowthami Subramani Updated:
உலகளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வெற்றி விகிதமே அதிகம்…! மத்திய அமைச்சரின் கருத்து..!Representative Image.

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வெற்றி விகிதமே அதிகம்…! மத்திய அமைச்சரின் கருத்து..!Representative Image

ஸ்டார்ட்அப் இந்தியா

இந்தியாவில் தொழில் முனைவோரை அதிகப்படுத்தும் விதமாக, ஸ்டார்ட் அப் இந்தியா கடந்த ஜனவரி 16, 2016 ஆம் ஆண்டு அன்று நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவில் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கும் விதமாக அமைகிறது. அதன் படி, 2017-2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 4% உதல் 7.6% வரை அதிகரித்துள்ளது. இந்த ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் என்பது நாட்டில் தொழில்முனைவோர்க்கு மலிவான வணிக நிதியை வழங்குவதற்கான திட்டம் ஆகும்.

உலகளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வெற்றி விகிதமே அதிகம்…! மத்திய அமைச்சரின் கருத்து..!Representative Image

தொடர் வெற்றி

2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதாவது கொரோனா காலத்தில், இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை அதிகமானது. இது புதிய தொழில் முனைவோர்களிடையே இருக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. ஸ்டார்ட் அப் தொடங்குவதில் மட்டுமல்லாமல், அவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

உலகளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வெற்றி விகிதமே அதிகம்…! மத்திய அமைச்சரின் கருத்து..!Representative Image

மற்ற நாடுகளுடன்

அதன் படி, மக்களவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்ததாவது, “ஸ்டார்ட் அப்கள் தோல்வியடையும் வாய்ப்புகள் மிக அதிகம் என்றாலும், உலகின் பிற பகுதிகளை விட, ஒப்பீட்டளவில் அதிகம். 2016 ஆம் ஆண்டு 452 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, நவம்பர் 30, 2022 ஆம் நாள் நிலவரப்படி 84,012 ஆக அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

உலகளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வெற்றி விகிதமே அதிகம்…! மத்திய அமைச்சரின் கருத்து..!Representative Image

ஸ்டார்ட் அப்களுக்கான ஆதரவு

ஸ்டார்ட் அப்களுக்கு அவர்களின் வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களில், ஸ்டார்ட் அப்களுக்கான நிதி (FFS), ஸ்டார்ட் அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் (SISFS) மற்றும், ஸ்டார்ட்அப்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS) போன்ற பல்வேறு கட்டங்களின் மூதம் ஆதரவு வழங்கப்படுகிறது. இதில், ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபன்ட் திட்டம் 2021 -22 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ரூ.945 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்