Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேம் டெவலப்மெண்ட் கல்வியை வழங்கும் ஒரே ஸ்டார்ட்அப்...

Nandhinipriya Ganeshan September 21, 2022 & 17:40 [IST]
கேம் டெவலப்மெண்ட் கல்வியை வழங்கும் ஒரே ஸ்டார்ட்அப்...Representative Image.

டெல்லியை சேர்ந்த எட்-டெக் நிறுவறுவனமான அவுட்ஸ்கல், துணிகர மூலதன நிறுவனமான கலாரி கேபிட்டலிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை விதை நிதியாக பெற்றுள்ளது. மயங்க் க்ரோவர் என்பவரால் நிறுவப்பட்ட அவுட்ஸ்கல், கேமிங் துறையில் திறமைகளை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் எட்-டெக் தளமாகும். இது பயனர்களுக்கு அவர்களின் கேம் மேம்பாட்டில் சிறந்து விளங்க உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல், வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு உதவி மூலம் வெப் 3 தொழில்களில் சிறந்த விளங்கவும் உதவுகிறது. 

இதுவரை 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், கேமிங் துறையில் ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கேம் டெவலப்மெண்ட் புரோகிராம்ஸ் மூலம் வேலைகளை பெற உதவியதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் சேரும் பலருக்கு கோடிங் அனுபவம் என்பது கிடையாது, வெறும் ஆர்வத்தினால் மட்டுமே சேருவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், அவுட்ஸ்கல் நிறுவனம் PTW, GSN கேம்ஸ் மற்றும் nCore கேம்ஸ், LILA கேம்ஸ், ப்ளேஷிஃபு போன்ற ஸ்டார்ட்அப்கள் உட்பட, இந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட கேமிங் ஸ்டுடியோக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யுஎஸ்ஏ மற்றும் இந்தியா முழுவதும் உள்ள எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ், கிக்ஸே, டெனா மற்றும் ஜங்கிலீ கேம்ஸ் போன்ற கேமிங் ஸ்டுடியோக்களில் முன் அனுபவம் கொண்ட க்ரோவர் இது குறித்து பேசுகையில், இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப கேமிங் வளர்ச்சியில் கட்டமைக்கப்பட்ட திட்டங்கள் இல்லை. நாங்களோ! வயது மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையே உள்ள இந்த இடைவெளியை  குறைக்கிறோம் என்கிறார். 

ஆரம்ப நிலையில் உள்ள வென்ச்சர் கேபிட்டல் நிறுவனமான Kalaari Capital -ன் நிர்வாக இயக்குநர் வாணி கோலா கூறுகையில், கேமிங் துறையில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றான தொழில்நுட்ப திறமைகளின் பற்றாக்குறையை தீர்க்க மயங்க் க்ரோவர் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து இந்த பயணத்தில் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்