Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

அக்ரிடெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு.. 

Nandhinipriya Ganeshan Updated:
அக்ரிடெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு.. Representative Image.

மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், “தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன், வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறையுடன் இணைந்து, விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களுக்காக அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஸ்டார்ட்அப்களை அடையாளம் காண சிறப்பு ஹேக்கத்தான் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். 

அதன்படி, நீண்ட நாட்களாக விவசாயத் துறையில் சவாலாக விளங்கும் சில தேவைகள் மற்றும் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு அரசின் MSME துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN) "தமிழ்நாடு அக்ரி ஹேக்கத்தான் 2022" ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த ஹேக்கத்தான் நிகழ்வில், வணிக ரீதியாக சாத்தியமான யோசணைகளை வழங்கும் அக்ரிடெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வெகுமதி அளிக்கப்படும். மேலும், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ. 10 வரை மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படும். 

மேலும், இந்த ஹேக்கத்தானில் வெற்றி பெறுபவர்கள் StartupTN, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பிற அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் அனைத்து வசதிகளையும் பெறுவார்கள்.

அக்ரிடெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு.. Representative Image

முக்கியமாக எதிர்பார்க்கப்படும் தீர்வுகள்:

  • மரவள்ளி கிழங்கு அறுவடை மற்றும் மண் நீக்கி சுத்தம் செய்வதற்கான கருவிகள் (ஒருங்கமைந்த அல்லது தனித்தனி கருவிகள்)
  • பனை மரம் ஏறுவதற்கு தேவையான இயந்திரக் கருவிகள்
  • வேளாண் பயிர்களை சந்தைபடுத்துவதற்கு முன்பான தர பரிசோதனைக்காக ஒவ்வொரு முறையும் ஆய்வகத்திற்கு செல்லும் நேரத்தினை குறைக்கும் விதமாக விவசாய நிலத்திலோ அல்லது வணிகம் பரிவர்த்தனை நடக்கும் இடத்திலோ பயிர்தர பரிசோதனை செய்வதற்கான புதுமையான தீர்வுகள்
  • உணவு மற்றும் வேளாண் பயிர்கள் விரைவில் கெட்டுப்போகாத வண்ணம் அதன் ஆயுளை (Shelf life) அதிகரிக்க உதவும் புதுமையான தீர்வுகள் 

யார் விண்ணப்பிக்கலாம்?

மேற்கூறிய தீர்வுகளுக்கு தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வைத்திருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புத்தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர் ஹேக்கத்தானில் பங்கேற்கலாம். 

போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த வல்லுநர் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு முதற்கட்டமாக டிசம்பர் 2022 முதல் வாரத்தில் நடைபெறும் பயிற்சிமுகாமில் பங்கேற்பார்கள்.

அதன் பின்னர் டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்வில் இவர்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தப்படும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தொடர்ந்து தீர்வுகளை வணிக ரீதியில் பயனளிக்கும் வகையில் நடைமுறைபடுத்துவதற்கான முதலீட்டு உதவி, வழிகாட்டுதல் என அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி:

ஹேக்கத்தான் குறித்தானவிரிவான தகவல்களை அறிந்து கொள்ள www.startuptn.in இணைய தளத்தினை பார்வையிடலாம். ஸ்டார்ட அப் நிறுவனங்கள் தங்களது புத்தாக்க தீர்வுகளை நவம்பர் 25, 2022 மாலை 5.00 மணிக்கு முன்னதாக இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Also Read: உங்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல நிதிஉதவி எதிர்பார்க்கிறீங்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு..

Tag: Tamil Nadu Agri Hackathon 2022 | StartupTN | Startup Contest 2022 | Startup News | Startup News Tamil | Startup News Tamil Today.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்