Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேசிய ஸ்டார்ட் அப் தினம்..! தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்…

Gowthami Subramani Updated:
தேசிய ஸ்டார்ட் அப் தினம்..! தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்…Representative Image.

இந்தியாவில் புதிய தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொழில்முனைவோர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் தேசிய ஸ்டார்ட் அப் தினமாக ஜனவரி 16 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய ஸ்டார்ட் அப் தினம்..! தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்…Representative Image

ஸ்டார்ட் அப்

நாட்டில் தொழில்முனைவோர்க்கு மலிவாக வணிக நிதியை வழங்குவதற்கு, இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாக அமைவதே ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ஆகும். இதில் தொழில்முனைவோர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான மானியத் தொகைகளைப் பெறலாம். தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் அமையும் இந்த திட்டமானது பெரிதும் வரவேற்கப்படுகிறது.

தேசிய ஸ்டார்ட் அப் தினம்..! தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்…Representative Image

தேசிய ஸ்டார்ட் அப் தினம்

தொழில்முனைவோர்களை அதிகரிக்கும் வகையிலேயே, தேசிய ஸ்டார்ட் அப் தினம் அமைகிறது. ஸ்டார்ட் அப்களுக்கு எளிதான வகையில் நிதிகளை வழங்குவதற்கு இந்திய ஸ்டார்ட் அப் திட்டம் உதவும். அதே சமயம், இந்த நிதி வழங்கும் திட்டமானது தகுதி வரம்பை பூர்த்தி செய்யும் தொழில்முனைவோர்களுக்கு வழங்குகிறது. இதற்கான சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஆன்லைனில் விண்ணப்பித்து நிதி பெறலாம்.

தேசிய ஸ்டார்ட் அப் தினம்..! தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்…Representative Image

இந்தியாவின் முதுகெலும்பு

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நாட்டின் முதுகெலும்பாக செயல்படுகிறது. இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கொள்கைகளுக்கான சிறந்த மாற்றமாக உள்ளது. இது போன்ற முயற்சிகள், இந்தியா பெருமிதமான நிலையை எட்டக்கூடியதாக அமையும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்தி, உலகளவில் இந்தியாவின் நிலையை உயர்த்துவதற்கான வழிவகையில்  தேசிய ஸ்டார்ட் அப் தினம் அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்