Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் முதல் முறையாக ஸ்டார்ட்அப்பில் முதலீடு.. எதற்காக?

Nandhinipriya Ganeshan September 05, 2022 & 13:20 [IST]
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் முதல் முறையாக ஸ்டார்ட்அப்பில் முதலீடு.. எதற்காக?Representative Image.

கடந்த 2015 ஆம் ஆண்டு நேரடி நுகர்வோர் பிராண்டாக தொடங்கப்பட்ட சுகர் காஸ்மெடிக்ஸ் 'SUGAR Cosmetics', பெண்களுக்கு தேவையான பல வகையான மேக் அப் பொருட்களையும் மேக் அப் கிட்களையும் விற்பனை செய்து வரும் மிகவும் பிரபலமான ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். 

ஆண்டுக்கு 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யும் சுகர் காஸ்மெடிக்ஸ் தற்போது 550 இடங்களில் 45,000 சில்லறை வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ளது. தற்போது, இந்த நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங்கிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நிதியாக பெற்றுள்ளது.

பிரபல நடிகரான ரன்வீர் சிங் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்வது இதுவே முதல் முறையாகும். இது குறித்து பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு மடங்கிற்கும் அதிகமாக விற்பனையை அதிகரித்துள்ள சுகர் காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இதோடு மட்டுமல்லாமல், நிறுவனத்தின் ஆளுமையை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து முதலீட்டனை ஈர்க்க பல சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்