Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஆக 29 - செப் 03]...

Nandhinipriya Ganeshan September 05, 2022 & 12:20 [IST]
Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஆக 29 - செப் 03]...Representative Image.

Weekly Funding Roundup: இந்த வாரத்தில் 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி இருக்கின்றன. அதில் 4 நிறுவனங்கள் மட்டும் தங்களது விபரங்களை வெளியிடவில்லை. ஆகமொத்தம், இந்த வாரத்தில் 19 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற்ற மொத்த தொகையின் மதிப்பு சுமார் $275 மில்லியன் ஆகும். அதுவே, சென்ற வாரத்தில் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் $142.2 மில்லியனை பெற்றிருந்தன. வாராந்திர நிதியின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வாரத்தின் மதிப்பு சென்ற வாரத்தை விடவும் சற்று அதிகமாகவே உள்ளது. 

இந்த வாரத்தின் முக்கிய ஒப்பந்தங்கள்:

EarlySalary - பூனேவை சேர்ந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான EarlySalary, TPG இன் தி ரைஸ் ஃபண்ட் மற்றும் நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் இணைந்து நடத்திய சீரிஸ் டி நிதிச் சுற்றில் $110 மில்லியனை திரட்டியது. தற்போதுள்ள முதலீட்டாளர்களான பிரமல் கேபிடல் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் இந்த சுற்றில் பங்கேற்றன. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு $300 மில்லியனை எட்டியுள்ளது. 

Skyroot - ஹைதராபாத்தை சேர்ந்த விண்வெளி நிறுனமான ஸ்கைரூட், GIC பிரைவேட் லிமிடெட் தலைமையிலான சீரிஸ் பி நிதிச் சுற்றில் 51 மில்லியன் டாலர்களை திரட்டியது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட ஸ்கைரூட், இந்திய விண்வெளித் துறையில் முக்கிய ஸ்டார்ட்அப்களில் ஒன்றாகும், இது அரசு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இஸ்ரோவுடன் வணிகத்தை நடத்திவருகிறது. 

Bike Bazaar - இரு சக்கர வாகன வணிகத்தில் கவனம் செலுத்தும் நிதியுதவி ஸ்டார்ட்அப் நிறுவனமான Bike Bazaar, மகளிர் உலக வங்கி நிர்வாகத்தின் தலைமையிலான சீரிஸ் D நிதி சுற்றில் 21 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. ஜெர்மானிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படும் Women’s World Banking Management பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை செய்துள்ளது. 

Also Read: விதை நிதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் sexual wellness ஸ்டார்ட்அப்..

வெளியிடப்படாத டீல்ஸ் (Undisclosed Deals):

  • Apni Bus
  • Soptle
  • Tortoise
  • Greenest

ஆகிய நிறுவனங்கள் தங்களது நிதி விவரங்களை வெளியிடவில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்