Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup Layoffs 2022: ஸ்டார்ட்அப் நிறுவனத்துல வேலை செய்றீங்களா? அப்ப அடுத்த 30 நாட்களுக்கு உஷாரா இருந்துக்கோங்க...!!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 18:45 [IST]
Startup Layoffs 2022: ஸ்டார்ட்அப் நிறுவனத்துல வேலை செய்றீங்களா? அப்ப அடுத்த 30 நாட்களுக்கு உஷாரா இருந்துக்கோங்க...!!!Representative Image.

Startup Layoffs 2022: கடந்த சில மாதங்களாகவே டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகின்றன. வட்டி விகித உயர்வு, வர்த்தகச் சரிவு, பணவீக்கம், ஆகியவற்றால் புது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, ஸ்டார்ட்அப் துறையில் ஏராளமான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. 

பணிநீக்கம்:

கடந்த மே 18 ஆம் தேதி எட்டெக் துறையில் பிரபலமான யூனிகார்ன் ஸ்டார்ட்அப் வேதாந்து, 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேப்போல், மற்றொரு எட்கெட் நிறுவனமான அனாகாடமியும் செலவைக் குறைக்கும் முயற்சியில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அடுத்து, லிடோ லேர்னிங் 100 ஊழியர்களையும், பைஜூவுக்குச் சொந்தமான WhiteHat Jr சுமார் 800 ஊழியர்களையும், ட்ரெல் 300 ஊழியர்களையும், லிடோ 200 ஊழியர்களையும், furlenco 180 ஊழியர்களையும், மீஷோ 150 ஊழியர்களையும், ஓகேகிரெடிட் 35 ஊழியர்களையும் பணிநீக்கம் (Startup Layoffs 2022 India) செய்துள்ளது. 

கார்ஸ்24 ஸ்டார்ட்அப்:

ஜப்பானின் சாப்ட்பேங்க் மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆதரவுடன் கார்ஸ்24, நிதியளிப்பதில் மந்தநிலைக்கு மத்தியில் செலவைக் குறைக்கும் முயற்சியில் மொத்த ஊழியர்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம், இந்நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு விரிவாக்கம் செய்யவிருப்பதாக தெரிவிந்திருந்தது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் இடம் பெற்றுள்ள இந்நிறுவனம் தாய்லாந்து சந்தையிலும் நுழைந்துள்ளது. இந்தியாவில், இது ட்ரூம், கார்ட்ரேட், ஸ்பின்னி மற்றும் கார்டெகோ ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. Cars24 கடைசியாக டிசம்பரில் ஆல்பா வேவ் குளோபல் தலைமையில் $400 மில்லியன் நிதியுதவியை நிறைவு செய்தது. இதில் 100 மில்லியன் டாலர் கடன் பாகமும் அடங்கும். நிதிச் சுற்றுக்குப் பிறகு நிறுவனத்தின் மதிப்பீடு மூன்று மடங்கு உயர்ந்து 3.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. நவம்பர் 2020 இல் சுமார் $200 மில்லியன் திரட்டியதன் மூலம், பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் இது முதல் யூனிகார்ன் ஆனது. விக்ரம் சோப்ரா, மெஹுல் அகர்வால், ருச்சித் அகர்வால் மற்றும் கஜேந்திர ஜாங்கிட் ஆகியோரால் 2015 ஆம் ஆண்டு கார்ஸ்24 நிறுவப்பட்டது.

ஸ்டார்ட்அப் துறை:

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 யூனிகார்ன்களை கொண்ட உலகிலேயே மூன்றாவது ஸ்டார்ட்அப் சூழல் என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஆனால், இந்திய ஸ்டார்ட்அப் துறையில் 2022 துவக்கம் முதலே பெரும் தொகை கொண்ட முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அனைத்து முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், யூனிகார்ன்களும் அதன் முதலீட்டாளர்களை பணத்தை பார்த்துச் செலவு செய்து சேமிக்க வேண்டுமாறு, சிலிக்கான் வேலி முதல் இந்தியா வரையில் புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் முதலீட்டு நிறுவனமான ஒய் காம்பினேட்டர் அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்டார்ட்அப் ஊழியர்கள்:

பெரிய முதலீடுகளை நம்பி இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவங்கள் தங்களது செலவுகளை குறைக்க அடுத்த 30 நாட்களுக்கு நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்தியா முழுவதும் நிறைய பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவாகும். எனவே, ஸ்டார்ட்அப் ஊழியர்கள் மிகவும் கவனத்துடன் இருந்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துள்ளது.   

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்