Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விதை நிதி (Seed Fund) பெற்ற பூனே சாஸ் ஸ்டார்ட்அப்...

Nandhinipriya Ganeshan September 19, 2022 & 12:48 [IST]
விதை நிதி (Seed Fund) பெற்ற பூனே சாஸ் ஸ்டார்ட்அப்...Representative Image.

பூனேவை சேர்ந்த சாஸ் ஸ்டார்ட்அப் டிங் 'Dingg', அமெரிக்காவை தளமாக கொண்ட பிக் சன் வென்ச்சர்ஸிடம் இருந்து ரூ.3.5 கோடியை (0.5 மில்லியன்) நிதியாகப் பெற்றுள்ளது. இந்தச் சுற்றில் Jean Claude Biguine -ன் சி.இ.ஓ சமீர் ஸ்ரீவஸ்தவ், பியூட்டி எசென்ஷியல்ஸின் நிறுவனர்களான அயாஸ் மற்றும் ரஹீம் கபானி, GROWW நிறுவனத்தின் சி.இ.ஓ லலித் கேஷ்ரே, Excellon Software -ன்  சி.இ.ஓ விஷ்ணு தம்பி, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஹித் கோதி, ஆரஞ்சு ஹெல்த் டிஜிட்டல் நிறுவனத்தின் நிறுவனரான திவேஜ் வாத்வா, அனுஜ் குப்தா, தீரஜ் சிங் சவுகான், பிரதீக் ஜெய்ஸ்வால், புஷ்கர் ராஜ் திவாரி, மிலிந்த் டோர்னி, பிரசாந்த் ஜெயின் மற்றும் நிதேஷ் நாக்தேவ் உள்ளிட்ட பல முதலீட்டாளர்களும் பங்குபெற்றனர். 

இந்த புதிய நிதியை கொண்டு அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், ஆட்டோமேஷன் திறன்களை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அழகு மற்றும் ஆரோக்கியத் துறையில் விரிவாக்கத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய நிதியை பயன்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது. 

அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான துறை தொடர்ந்து வளர்ந்து வருவதால், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான புதுப்புது முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்