Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup News Tamil: ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..

Nandhinipriya Ganeshan July 29, 2022 & 15:00 [IST]
Startup News Tamil: ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..Representative Image.

PriceLabs 

பிரைஸ்லேப்ஸ் (a revenue management platform for vacation rental owners and property managers) அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான சம்மிட் பார்ட்னர்ஸிடமிருந்து $30 மில்லியன் திரட்டியுள்ளது.

ChattyBao

டெல்லியை சேர்ந்த இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான ChattyBao, வெர்டெக்ஸ் வென்ச்சர்ஸ் சவுத் ஈஸ்ட் ஆசியா மற்றும் இந்தியா, இன்ஃபோ எட்ஜ் வென்ச்சர்ஸ் என்ற இரு முதலீட்டாளர்களிடமிருந்து விதை சுற்றில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளனர். மேலும், இந்த நிதிச்சுற்றில் 7Square வென்ச்சர்ஸ் மற்றும் பல்வேறு முக்கிய ஏஞ்சல் முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். 

The Nestery 

இ-காமர்ஸ் தளமான தி நெஸ்டரி, இன்ஃப்ளெக்ஷன் பாயின்ட் வென்ச்சர்ஸ் தலைமையிலான ப்ரீ-சீரிஸ் ஏ மூலம் ரூ.6 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது.

GetSupp

பெங்களூரை சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்அப்பான கெட்ஷப், ஜெனரல் கேடலிஸ்ட், பெட்டர் கேபிடல் கார்ப்பரேஷன் மற்றும் மார்க்கீ ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து விதை நிதியாக ரூ. 9.5 கோடியை (சுமார் $1.1 மில்லியன்) பெற்றுள்ளது. 

KNYA Med 

மும்பையை சேர்ந்த ஆன்லைன் மருத்துவ ஆடை பிராண்டான KNYA Med, டிஎஸ்ஜி கன்ஸூமர் பார்ட்னர்ஸ் தலைமையிலான விதை நிதிச்சுற்றில் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளது. 

Jai Kisan

கிராமப்புற ஃபின்டெக் ஸ்டார்ட்அப்பான ஜெய் கிசான், தனது முந்தைய மற்றும் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து சீரிஸ் பி நிதிச்சுற்றில் இருந்து ரூ. 142 கோடியை ($18 மில்லியன்) பெற்றுள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்த ஆண்டு கிடைத்து முதல் நிதி இதுவாகும். 

ISRO

இந்திய ராக்கெட் ஏவுதளங்களில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏற்றிச் சென்றதன் மூலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமார் 279 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்