Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?

Gowthami Subramani November 21, 2022 & 11:30 [IST]
தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?Representative Image.

தமிழ்நாடு அரசு இளம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

அறிக்கையின் படி, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணி செய்ய மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 67 லட்சத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு பதிவு செய்தவர்களில் கலை, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட ஏதாவதொரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?Representative Image

ஆய்வறிக்கை ஒன்றில் தனியார் துறைகளை விட அரசு பணிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக அதாவது 100-க்கு 65% க்கும் அதிகமானோர் முன்னுரிமை அளித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இன்றைய இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அரசு பணியில் பூர்த்தி செய்ய முடியாது. ஏனெனில், கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளுக்கு சுமார் 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 0.3% விண்ணப்பதாரர்கள் மட்டுமே நிரந்தர வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?Representative Image

இதே போல தான் தமிழ்நாடு அரசுத் துறை வேலைவாய்ப்பிலும். டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகபட்சமாக 20 ஆயுரம் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு லட்சக் கணக்கில் விண்ணப்பிப்பர்.

இதனால், தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்கவும், ஊக்கமளிக்கவும் இது அமையும். இதில், எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல், தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தால் போதுமானது எனக் கூறப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?Representative Image

மானியத் தொகை

இந்த திட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களை மேற்கொள்வதற்கு ரூ.75 லட்சம் வரையிலான மானியம் வழங்கப்படுகிறது. அதாவது திட்டத்தொகையில் 25% மானியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்களின் வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பெண்கள்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் போன்றவர்களுக்கு 45 வயது வரை தளர்வு அளிக்கப்படுகிறது.

தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?Representative Image

தேவையான அடிப்படைத் தகுதிகள்

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நபர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பு / டிப்ளமோ / ஐஐடி சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், Capital Expendture + Marginal Money for Working Capital கட்டாயம் 10 லட்சம் முதல் 5 கோடி வரை இருக்க வேண்டும்.

மேலும், திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் 15 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

வங்கக் கடன் திருப்பி செலுத்த வேண்டிய காலம்: 5 முதல் 7 ஆண்டுகள். இதில் வங்கிக் கடனுக்கான வட்டியில் 3% பின் – வட்டி மானியமாக திருப்பி செலுத்திக் கொள்ள காலம் வழங்கப்படுகிறது.

தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியத்தொகை… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… எப்படி பெறுவது.?Representative Image

மேலும் சில விவரங்களுக்கு,

இது குறித்த மேலும் சில தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியிலோ, தொலைபேசி எண்ணிலோ தெரிந்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: www.editn.in

தொலைபேசி எண்: 9444556099, 9677152265, 044-22252081/22252082

முகவரி

சிட்கோ தொழிற்பேட்டை,

பார்த்தசாரதி கோவில் தெரு,

ஈக்காட்டுத்தாங்கல்,

சென்னை – 600 032.

மானியம் தொடர்பான தகவல்களைப் பெற சில முக்கிய இணைப்புகள்:

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

பதிவு செய்வதற்கு இந்த இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

பயிற்சித் திட்டம் குறித்த தகவல்களைப் பெற இந்த இணையதளத்தை க்ளிக் செய்யவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்