Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

StartUpTN's BrandLabs & Launchpad: திருநெல்வேலி மக்களே.. உங்களுடைய பிராண்டை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க..

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 17:30 [IST]
StartUpTN's BrandLabs & Launchpad: திருநெல்வேலி மக்களே.. உங்களுடைய பிராண்டை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image.

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission - TANSIM), தமிழ்நாட்டில் சிறந்த ஸ்டார்ட்அப் சூழமைவினை உருவாக்க தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டார்ட்அப்டிஎன் பிராண்ட் லேப்ஸ் (StartupTN Brand Labs) மற்றும் ஸ்டார்ட்அப்டிஎன் லாஞ்ச்பேட் (StartupTN Launchpad) என்ற இரு புதிய முன்முயற்சிகளுடன் செயல்பட்டு வருகிறது.

StartupTN BrandLabs என்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்முனைவில் ஆர்வமுடையோர், மாணவர்கள், வெற்றியடைந்த தொழில் ஆளுமைகள், தொழில்முனைவு வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் களமாகும். மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வில், சிறந்த, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளியிடும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது நிறுவன தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அவர்களின் ஆரம்ப நாட்களில் அதிக செலவு செய்யாமல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம். 

அந்தவகையில், StartupTN BrandLabs ஃபோரம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்ட் அல்லது தயாரிப்புகளை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த விரும்பினால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். தற்போது இதற்கான அப்ளிகேஷன் இப்போது திறக்கப்பட்டுள்ளது, அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிராண்ட் லேப்ஸ் ஃபோரத்தில் உறுப்பினராவதற்கும், நிகழ்வில் பங்கேற்கவும் விரும்பினால் இங்கே பதிவு செய்யவும்: Apply Now

மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்கள் தங்கள் தயாரிப்பு அல்லது பிராண்டை அறிமுகப்படுத்த இங்கே விண்ணப்பிக்கவும்: Apply Now

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2022 (Before 5 PM) 

உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைத் அறிமுகப்படுத்தவதன் மூலமாக உங்களுடைய நிறுவனத்தின் தரத்தையும், மதிப்பையும் நாடளவில் பரப்பி நன்மை அடைய இந்த சிறந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்