Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல நிதிஉதவி எதிர்பார்க்கிறீங்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
உங்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல நிதிஉதவி எதிர்பார்க்கிறீங்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு..Representative Image.

கோயம்புத்தூர் நகரின் பண்பையும், உறுதியையும், உத்வேகத்தையும் கொண்டாடும் விதாமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் "கோயம்புத்தூர் விழா" கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 15வது பதிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்துள்ளார். கோவை மாநகராட்சி நிர்வாகம் யங்க் இந்தியன்ஸ் (YI) பங்களிப்புடன் இணைந்து நடத்தப்பட உள்ள இவ்விழாவானது வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. மேலும், அடுத்த ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கோயம்புத்தூர் விழாவின் 15 வது பதிப்பை வரவேற்கும் விதமாக, ஆடுகளம் (Pitch), சைக்ளாத்தான் (Cyclathon), கலைத் தெரு (Art Street) உள்ளிட்ட 15 புதிய நிகழ்வுகளும் சேர்க்கபட்டுள்ளன. 

அதன்படி, தங்கள் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடனே இந்நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுங்கள். அதாவது, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நடத்தும் இந்த ஆடுகளம் என்ற போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பங்கேற்கலாம். இறுதிப்போட்டி ஜனவரி 8-ம் தேதி கோயம்பத்தூரில் நடைபெறும். புதுமையான யோசனையுடன் கலந்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், உங்க பிராண்டை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தவும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லவும் ஆதரவு வழங்கப்படும். 

கடைசி தேதி: டிசம்பர் 10, 2022

அரை இறுதிப்போட்டி: டிசம்பர் 17, 2022

இறுதிப்போட்டி: ஜனவரி 04, 2023

இடம்: கோயம்புத்தூர்

இங்கே பதிவு செய்யவும்:  The Pitch 2023


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்