Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN Events

Gowthami Subramani Updated:
பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN EventsRepresentative Image.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மதுரை மண்டல மையமானது, StartupTN DevHack 2023 Hackathon என்ற நிகழ்ச்சியை மதுரையில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்குப் பரிசுத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஹேக்கத்தான் நிகழ்ச்சி குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN EventsRepresentative Image

ஹேக்கத்தான் நிகழ்ச்சி

மதுரையில் ஒரு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியானது, Internet of Things (IoT) –ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதன் படி, இந்த IoT அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மூலமாக, உண்மையான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உழைக்கும் வல்லுநர்களும், மாணவர்களும் ஒன்றிணைய வேண்டும்.

நடைபெறும் இடம்

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், ஒரு நாள் நிகழ்வாக ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN EventsRepresentative Image

முக்கிய தேதிகள்

இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கான முக்கிய தேதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹேக்கத்தான் துவங்கப்பட்ட நாள்: ஜனவரி 10, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 24, 2023 மாலை 5 மணி வரை

முகாம் துவக்க நாள் (Boot Camp): ஜனவரி 25, 2023

நிகழ்ச்சி நடைபெறும் நாள்: ஜனவரி 27, 2023

நிகழ்ச்சி நடைபெறும் நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 07.30 மணி வரை

பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN EventsRepresentative Image

நிகழ்ச்சிக்கான Problem Statement

✤ IoT சாதனங்களைக் கண்காணிப்பதற்கான பொதுவான IoT பயன்பாடு (IoT Application for monitoring IoT Devices)

✤ பல பயனர்களின் நேரடி வாக்குப்பதிவு செயலி (Multiuser Live Polling App)

✤ Blue Collar தொழிலாளர்களுக்கான பணி மேலாண்மை (Task Management for Blue Collar Labour)

✤ பிளாக்செயினில் IoT-க்கான LoRa (Bitcoin)

✤  Nearby Bluetooth Attendance

நிகழ்ச்சியின் முக்கிய விவரங்கள்

இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

✤  இது ஒரு நபர் ஹேக்கத்தான் மற்றும் DevHack 2023 ஹேக்கத்தானில் குழு ஒன்று உருவாக்கப்படும்.

✤  சிக்கல்களைத் தவிர்த்து, ஒரு புதிய பயன்பாட்டை குழுக்கள் உருவாக்க முடியும்.

பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN EventsRepresentative Image

பரிசுத்தொகை

இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பரிசுத் தொகை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் பரிசு – ரூ.40,000/-

இரண்டாம் பரிசு – ரூ.25,000/-

மூன்றாம் பரிசு - ரூ.15,000/-

நான்காம் பரிசு – ரூ.12,000/-

ஐந்தாம் பரிசு – ரூ.8,000/-

மதுரையில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் கலந்து கொண்டு, பரிசுத் தொகைகளை வெல்லுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்