Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Nadu SC/ST Startup Fund: எஸ்.சி., எஸ்.டி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அரசின் நிதியுதவி பெற ஓர் அரிய வாய்ப்பு.. இப்பவே விண்ணப்பியுங்கள்...

Nandhinipriya Ganeshan November 17, 2022 & 11:21 [IST]
Tamil Nadu SC/ST Startup Fund: எஸ்.சி., எஸ்.டி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அரசின் நிதியுதவி பெற ஓர் அரிய வாய்ப்பு.. இப்பவே விண்ணப்பியுங்கள்...Representative Image.

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) பட்டியலின மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் தங்கள் வணிகத்தை நடத்துவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் நிதியுதவி எதிர்பார்க்கும் விண்ணப்பங்களுக்கு நவம்பர் 16 முதல் அழைப்பு விடுத்துள்ளது.  

TN - SC/ST Startup Fund என்பது புதுயுக தொழில்முனைவில் தமிழக அரசின் சமூக நீதி சார்ந்த ஒரு முன்னெடுப்பு, இது எஸ்.சி., எஸ்.டி. நிறுவனர்களால் ஊக்குவிக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான பிரத்யேக நிதியாகும். அதாவது, பட்டியலின மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு மட்டுமேயான திட்டம். இங்கு முதலீட்டு குழுவின் மதிப்பீடு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில்,  பங்கு அல்லது பிணையில்லா கடன் முறைகளில் முதலீடு வழங்கப்படும். 

இந்த நிதியாண்டில் இதெற்கென 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை முதலீடு செய்து முடிக்கும் வரையில் விண்ணப்பங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று டான்சிம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு அனுபவம் மிக்க வழி காட்டிகளும் தொடர்ந்த விரைவு வளர்ச்சிகான பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படும். 

தகுதி:

இந்த நிதியுதவியை பெற, நிறுவனத்தின் பங்குகளில் 50% க்கும் அதிகமான பங்குகளை எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வைத்திருக்க வேண்டும்.

தொழில்முனைவோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராகவோ அல்லது தமிழ் வம்சாவளியாகவோ இருக்க வேண்டியது அவசியம்.

நிறுவனத்தின் கட்டுப்பாடு எஸ்சி/எஸ்டி பங்குதாரர்களிடம் இருக்க வேண்டும்.

நிறுவனம் இந்தியாவில் வசிக்க வேண்டும் மற்றும் அதன் முதன்மையான செயல்பாட்டுத் தளம் இந்தியாவாக இருக்கவேண்டும்

தமிழ்நாட்டிற்குள் முதன்மையான செயல்பாட்டுத் தளத்தைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

எனவே, SC/ST பிரிவை சேர்ந்த தகுதி வாய்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரைந்து விண்ணப்பம் செய்து பயனடையுங்கள். 

மேலும் விபரங்களுக்கு Startup TN என்ற அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்