Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Millet Challenge for Startups: ரூ.1 கோடி பரிசை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சூப்பரான அறிவிப்பு!

Nandhinipriya Ganeshan September 01, 2022 & 18:20 [IST]
Millet Challenge for Startups: ரூ.1 கோடி பரிசை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சூப்பரான அறிவிப்பு!Representative Image.

Millet Challenge for Startups: சமீபத்தில் கர்நாடகாவின் ராய்ச்சூரில் இருக்கும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் "தினை மாநாடு 2022" என்ற மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அவர், ராய்ச்சூர் வேளாண் அறிவியல் பல்கலைகழத்திற்கு நபார்டு வங்கியின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நாட்டில் தினை மற்றும் தினை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக 'தினை சவால்' - Millet Challenge ஒன்றினையும் அறிவித்துள்ளார். 

தினையை வைத்து செயல்படும் எந்தவொரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மூன்று போட்டியாளர்களுக்கு தலா ரூ.1 கோடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேருக்கு தலா ரூ.20 லட்சமும், மேலும் 15 பேருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும். 

கல்யாண கர்நாடகாவை தினைக்கு பிரபலமானதாக மாற்றவேண்டும் என்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள மக்களில் ஆரோக்கியமான உணவை தேடும் அனைவருக்கும் தினை உணவுகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. மேலும், இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். 

Tags:

agriculture, millet challenge, millet challenge for startups, startup challenge, nirmala sitharaman, millet startups


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்