Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Funding Alert: 4 நண்பர்களின் கூட்டு முயற்சியால் அடுத்த லெவலுக்கு முன்னேறிய பெங்களூரு ஸ்டார்ட்அப்!

Nandhinipriya Ganeshan July 11, 2022 & 15:15 [IST]
Funding Alert: 4 நண்பர்களின் கூட்டு முயற்சியால் அடுத்த லெவலுக்கு முன்னேறிய பெங்களூரு ஸ்டார்ட்அப்!Representative Image.

Vegrow Funding: பி2பி அக்ரிகெட் ஸ்டார்ட்அப் நிறுவனமான வெக்ரோ, ப்ரோசஸ் வென்ச்சர்ஸ் தலைமையிலான சீரிஸ் பி நிதி சுற்றில் 25 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், எலவேஷன் கேபிட்டல், லைட்ஸ்பீட், அன்குர் கேபிட்டல் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் சஞ்சீவ் ராங்ராஸ் உள்ளிட்ட தற்போதைய முதலீட்டாளர்களும் இந்த சுற்றில் பங்கேற்றனர். பெங்களூரை சேர்ந்த இந்த பழ மார்க்கெட் ஸ்டார்ட்அப் கடைசியாக ஜூலை 2021 ஆம் ஆண்டு சீரிஸ் ஏ முதலீட்டு சுற்றில் $13 மில்லியனை திரட்டியது.

பிரனீத் குமார், ஷோபித் ஜெயின், மிருதுகர் பாட்சு மற்றும் நாயக் (Vegrow Founders) என்ற நான்கு நண்பர்களால் 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Vegrow, 100க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 20,000 விவசாயிகள் பயனடைவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வெக்ரோ நிறுவனத்தால் ஒரு நாளைக்கு 200 டன் பழங்கள் தரப்படுத்தி, பேக்கேஜ் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்நிறுவனம் விவசாயம் தொடர்பான பிற சேவைகளுடன் பயிர் ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்