Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: படும்மோசம்.. இந்த வாரமே இப்படினா, அப்போ அடுத்த வாரம் எப்படி இருக்குமோ..? [ஜூலை 4 – 9]

Nandhinipriya Ganeshan July 10, 2022 & 13:20 [IST]
Weekly Funding Galore: படும்மோசம்.. இந்த வாரமே இப்படினா, அப்போ அடுத்த வாரம் எப்படி இருக்குமோ..? [ஜூலை 4 – 9]Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம், 24 இந்திய ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்டியுள்ளன. அதில் 21 நிறுவனங்கள் மொத்தம் சுமார் 116 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளன. மேலும், இன்னோவிட்டி மற்றும் மார்க்கெட் வுல்ஃப் என்ற இரு நிறுவனங்கள் முறையே 45 மற்றும் 10 மில்லியன் டாலர்களையும் பெற்று நிதியுதவி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்திய ஸ்டார்ட் அப்கள் திரட்டிய மிகக் குறைந்த தொகை இதுவாகும். கடந்த வாரத்தை பொறுத்தவரை 19 ஸ்டார்ட் அப்கள் சுமர் 275.38 மில்லியன் டாலர்களை பெற்றிருந்தன. அதேபோல், அதற்கும் முந்தைய வாரத்தில், இந்த தொகை 980 மில்லியன் டாலர்களாக இருந்தது. இதை வைத்து பார்க்கும் பொழுது அடுத்த வாரத்தில் ஸ்டார்ட்அப்களின் நிலை என்னவாக இருக்கும் என்றே யூகிக்க முடியவில்லை.

இதற்கிடையில், இந்த வாரம் நிதியுதவி பெற்ற மொத்த ஸ்டார்ட் அப்களில் பேகார்டோ, சப்ஸை6, மற்றும் அக்ரோகிரேடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் தங்களது நிதி விபரத்தினை (Undisclosed Deals) வெளியிடவில்லை.

இந்த வாரத்தின் முக்கிய ஒப்பந்தங்கள்:

❖ ஃபின்டெக் ஸ்டார்ட்அப் இன்னோவிட்டி பேமென்ட் (Innoviti Payment), பந்தெரா க்ரோவ்த் பார்ட்னர்ஸ் (Panthera Growth Partners), அலுமினி வென்ச்சர்ஸ், பட்னி ஃபேமிலி ஆபிஸ், ஃப்எம்ஓ (FMO), மற்றும் பெஸ்மர் வென்ச்சர் ஆகியவற்றிலிருந்து $45 மில்லியன் திரட்டியது.

❖ மும்பையை சேர்ந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப் மார்க்கெட் வுல்ஃப், ட்ரீம் கேபிட்டல், ஜங்கிள் வென்ச்சர்ஸ், தலைமையிலான சீரிஸ் A சுற்றில் $10 மில்லியனை திரட்டியது.

❖ பி2பி எட்டெக் ஸ்டார்ட்அப் அண்ட்வால்க் (AntWalk), ஒய் காம்பினேட்டர், ஜிஎஸ்வி, மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா ஆகியவற்றிலிருந்து 7.5 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.

❖ பி2சி ஈ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் Acefour Accessories, சிக்ஸ்த் சென்ச் வென்ச்சர்ஸ், வால்ரெடோ வென்ச்சர் பார்ட்னர்களிடமிருந்து 7 மில்லியனை திரட்டியுள்ளது.

❖ பி2பி ஃபுட் மற்றும் அக்ரிடெக் ஸ்டார்ட்அப் வேகூல் ஃபுட்ஸ் ஸ்ட்ரைட் வென்ச்சர்ஸிடமிருந்து 6.5 மில்லியனை கடனாக பெற்றுள்ளது.

இந்த வார Acquisitions:

❖ சென்னையை சேர்ந்த ஃபின்டெக் சாஸ் ஸ்டார்ட்அப் எம்2பி ஃபின்டெக் (M2P Fintech), பெங்களூரை சேர்ந்த கிளவுட் லெண்டிங் ஸ்டார்ட்அப் Finflux ஐ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியது.

❖ அதேபோல், ஃபின்டெக் சாஸ் ஸ்டார்ட்அப் க்ளியர் (Clear), CimplyFive ஐ வாங்கியது. இதன் மதிப்பும் வெளியிடப்படவில்லை.

❖ லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் எமிசா (Emiza), வெளியிடப்படாத தொகைக்கு ஆன்லைன் ஷிப்பிங் தளமான ஷிப்கோவை வாங்கியது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்