Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

What is Seed Funding in Tamil: விதை நிதி என்றால் என்ன?

Nandhinipriya Ganeshan July 26, 2022 & 16:30 [IST]
What is Seed Funding in Tamil: விதை நிதி என்றால் என்ன?Representative Image.

What is Seed Funding in Tamil: அடிக்கடி சீட் ஃபண்டு சீட் ஃபண்டு என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன? வாங்க பார்க்கலாம்.

ஸ்டார்ட்அப் என்றால் என்ன?

ஒவ்வொரு தொழில்முனைவோரும் பிசினஸ் (ஸ்டார்ட்அப்) என்ற விதையை இந்த மண்ணில் நம்பிக்கையோடு விதைக்கிறார்கள். ஆனால், அந்த விதை வளர வேண்டுமென்றால் தண்ணீர் என்ற பணம் அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் ஒரு விதையை வளர்ப்பது என்பது நிச்சயம் இயலாத காரியம். அதுபோல தான் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமும்.

ஒவ்வொரு வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் உறுதியான வேரை உருவாக்க மூலதனம் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஊழியர்களை பணியமர்த்துவது முதல் சந்தைப்படுத்துதல் வரை அனைத்தையும் ஈடுகட்ட பணம் இருக்க வேண்டும். இந்த அனைத்து சுமைகளையும் சற்று குறைப்பதற்காகவே, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள், நிறுவனர் ‘விதை நிதி’ என்ற தண்ணீரை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள். பொதுவாக, விதை நிதியாக பெறப்படும் தொகையை திருப்பித் தர வேண்டியதில்லை.

விதை நிதி என்றால் என்ன?

ஒரு ஸ்டார்ட்அப்பை ஆரம்பிப்பதற்கே பணம் கொடுப்பார்களா? என்று நினைக்க வேண்டாம். விதை நிதி என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தை தொடங்கி சில காலம் உங்க தொழிலை கவனித்து வருகிறீர்கள். இப்போது உங்களுடைய ஐடியா பலருக்கும் பயன்படும் வகையில் அமைந்துவிடுகிறது. அதை பெரிய அளவில் சந்தைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு பணம் வேண்டும்.

பணம் வேண்டும் ஆனால் அது கடனாக இருக்க கூடாது என்று நினைக்கிறீர்கள். அந்த சமயத்தில் உதவே நாட்டில் பல விதை முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களிடம் கேட்டு பெறலாம். ஆனால், அவர்களை நேரடியாக அணுக முடியாது. அதற்கு முதலில் உங்களுடைய ஊரில் இருக்கும் இன்குபேசன் சென்டர்களுக்கு செல்ல வேண்டும். அவர்களிடம் உங்களுடைய தொழில் என்ன, வருடம் முழுவதும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது, எதிர்காலத்தில் உங்களின் தயாரிப்புகள் எந்தளவிற்கு பயன்படும், எந்த அளவிற்கு லாபம் ஈட்டும், அதற்கான தேவைகள் என்னென்ன போன்ற அனைத்தையும் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

அவர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் தெரிவிப்பார்கள். முதலீட்டாளர்கள் எல்லாவற்றையும் சரிபார்த்து ஓகே செய்து, அதன்பின்னரே உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். இதுவே விதை நிதி. திருப்பிக் கொடுக்க தேவையில்லை என்பதற்கான அர்த்தம், எதிர்காலத்தில் உங்களுடைய பிசினஸில் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்க நீங்க தயாராக இருக்க வேண்டும் என்பதே.  

Tags:

What is Seed Funding in Tamil | What is seed capital in tamil | What is seed funding in startup | Seed funding meaning in tamil | Startup seed funding meaning in tamil | How to raise seed funding in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்