Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WhatsApp Latest News Today: உங்களுது ஐபோனா...அப்ப இனி வாட்ஸ்அப்...செயல்படாது! காரணம்?

Priyanka Hochumin May 23, 2022 & 12:40 [IST]
 WhatsApp Latest News Today: உங்களுது ஐபோனா...அப்ப இனி வாட்ஸ்அப்...செயல்படாது! காரணம்?Representative Image.

WhatsApp Latest News Today: உங்களுடைய ஐபோனில் இந்த iOS வெர்ஸன் இருந்தால் உடனே அப்டேட் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வாட்ஸ்அப் இனிமேல் செயல்படாது. 

சோசியல் மீடியாவில் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பும் செயலியான WhatsApp, அடிக்கடி நிறைய அப்டேட்களை (WhatsApp News Today) வெளியிட்டு வருகிறது. எது பயனர்களுக்கு சிறந்தது என்பதை ஆராய்ந்து அவர்களின் நிறை குறைகளை அறிந்து ஒவ்வொரு அப்டேட்களையும் வெளியிடுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், பழைய வெர்ஸன் OS இல் இயங்காது. எனவே, மக்களே உங்களின் ஸ்மார்ட்போனை அவ்வப்போது அப்டேட் செய்துகொள்ளுங்கள். இது உங்களுடைய பாதுகாப்பை கருதியே நடக்கும் ஒரு முக்கிய ரொட்டீனாகும். 

லொகேஷன் ட்ராக்கிங் அம்சங்கள் நிறுத்தம்...பேஸ்புக் அதிரடி...காரணம்?

வாட்ஸ்அப் தகவல் | News about WhatsApp Today  

அதனை கருத்தில் கொண்டு iOS10 மற்றும் iOS11 கொண்டு இயங்கும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C ஸ்மார்ட்போன்களில் தரப்பட்ட வாட்ஸ்அப் ஆதரவு அடுத்த சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. அது எப்படி இந்த இரண்டு மாடல்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் நிறுத்தப்படும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆதாரமாக wabetainfo இந்த ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ளது. அதில் iOS10, iOS11 கொண்டு இயங்கும் ஐபோன்களில் வருகின்ற அக்டோபர் 24, 2022 முதல் வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்படவுள்ளது (WhatsApp Latest News Today) என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் புதிய வெர்ஸனுக்கு மாற, Settings>General> Software Update என்பதை பின்பற்றி அப்டேட் செய்துகொள்ளுங்கள். 

இனிமேல் தெயிரியமாக பேசலாம்...யாரும் record பண்ண முடியாதே...!

கூடுதலாக, வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்த iOS 12 அல்லது அதற்கு பிறகு வந்த வெர்ஸன்கள் பயன்படுத்த சரியானது என்று வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த iOS 12 வெர்ஸனுக்கு அப்டேட் (News about WhatsApp Today) செய்யுங்கள். 

பயன்படுத்த முடியாத வாட்ஸ் அப்... அப்ப என்ன பண்ணனும்..?

குரூப்பில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுவது, 32 பேர் இணைந்து குரூப் வீடியோ கால் பேசுவது போன்ற நிறைய அப்டேட்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால் உடனே உங்களுடைய ஸ்மார்ட்போனை அப்டேட் செய்து பயன் பெறுங்கள். 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்