Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Facebook Latest Update News: லொகேஷன் ட்ராக்கிங் அம்சங்கள் நிறுத்தம்...பேஸ்புக் அதிரடி...காரணம்?

Priyanka Hochumin May 22, 2022 & 17:30 [IST]
Facebook Latest Update News: லொகேஷன் ட்ராக்கிங் அம்சங்கள் நிறுத்தம்...பேஸ்புக் அதிரடி...காரணம்?   Representative Image.

Facebook Latest Update News: பேஸ்புக்கில் யூசர்களின் ரியல் டைம் லொகேஷனை ட்ராக் செய்யும் அம்சங்களை நிறுத்தப்போவதாக தஃக்வால் வெளியாகியுள்ளது. 

நீங்கள் கவனித்திருப்பீர்களா என்று தெரியவில்லை, உங்கள் ஸ்மார்ட்போனில் கேமராவைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தால், அந்த இடம் மற்றும் நேரம் தானாகவே சேகரிக்கப்படும். அது எப்படி சேகரிக்கிறது என்றால், ஒவ்வொரு செயலியை நீங்கள் டவுன்லோட் செய்தால் "allow" அல்லது "deny" என்ற ஆப்ஷன் காண்பிக்கும். அதை நீங்கள் allow செய்தால் எல்லா தகவல்களையும் சேகரிக்க ஆரம்பித்துவிடும். உங்களின் ரியல் டைம் லொகேஷன், நேரம் போன்ற முழு விவரங்களும் காண்பிக்கப்படும். 

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் அக்கௌன்ட்டை Recover செய்வது எப்படி?

எதனால் இந்த முடிவு? | Facebook Related Latest News  

அந்த வகையில் மெட்டாவுக்குச் சொந்தமான சோசியல் மீடியா பிளாட்பார்ம் பேஸ்புக், ரியல் டைம் லொகேஷன் போன்ற சில சர்வீஸ்களை விரைவில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் - வெதர் அலர்ட்ஸ் (Weather Alerts), பேக்ரவுண்ட் லொக்கேஷன் (Background Location), நியர்பை ஃபிரெண்ட்ஸ் (Nearby Friends), லொக்கேஷன் ஹிஸ்ட்ரி (Location History) போன்ற சர்வீஸ்களை (Facebook Location Tracking) நிறுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் மக்கள் நிறைய பேர் இவற்றைப் பெரிதாக பயன்படுத்தாதது தான்.

யாருக்கும் தெரியாமல் Group-ல் இருந்து நைசாக நழுவும் WhatsApp அப்டேட்!

நோட்டிஃபிகேஷன் | Facebook Location Tracking 

இந்த முடிவு உறுதியானதற்கு பிறகு, மேலே குறிப்பிட்ட அம்சங்களை பயன்படுத்திய பயனர்களுக்க நோட்டிஃபிகேஷனில் இந்த தகவலை அனுப்பியுள்ளது. அதாவது மே 31 அன்றுடன் இந்த அம்சங்களில் டேட்டா சேகரிப்பை நிறுத்துவதாகவும், இதுவரை இந்த அம்சங்களில் சேகரிக்கப்பட்ட டேட்டாக்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முழுமையாக க்ளியர் செய்ய உள்ளதாகவும் பேஸ்புக் கூறியுள்ளது. இந்த தகவலை பேஸ்புக்கின் உரிமையாளர் மெட்டா, ஈமெயிலில் The Verge எனப்படும் பிரபல அமெரிக்க தொழில்நுட்ப செய்தி வெப்சைட்டிற்கு அனுப்பி உறுதிபடுத்தியுள்ளது. மேலும் அதில்,பயனர்கள் குறைவாக பயன்படுத்தப்படும் ஒரு சில சர்வீஸ்களை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் தங்களின் இருப்பிடத்தை நிர்வகிக்கும் லொகேஷன் சர்வீஸ்களை (Facebook Location Tracking) மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. 

கூகுல் அதிரடி..! போலி செயலிகள் ப்ளேஸ்டோரில் நீக்கம்..!

எனினும் பேஸ்புக்கில் இனிமே லொகேஷன் சர்வீஸ் இல்லையா? என்று நீங்கள் கேட்டால் அது தவறு. Facebook அதன் டேட்டாக்களுக்கு ஏற்ப தொடர்புடைய விளம்பரங்கள் மற்றும் லொக்கேஷன் செக்-இன்ஸ்களை வழங்க மற்றும் பிற அனுபவங்களுக்காக லொக்கேஷன் தகவலை சேகரிப்பதைத் தொடர உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. எனவே, நீங்கள் settings and privacy ஆப்ஷனில், பேஸ்புக் சேமிக்கும் எந்த ஒரு லொகேஷன் டேட்டாவையும் பயனர்கள் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம் அல்லது டெலீட் கூட செய்யலாம். நீங்கள் இப்பொழுது உங்களுக்கு தேவையான டேட்டாவை சேமித்துக்கொள்ளாமல் விட்டால், ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று சர்வீஸ்களை (Facebook Location Tracking) நிறுத்தப்போவதாக குறிப்பிட்டவற்றுள் டேட்டாக்கள் டெலீட் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.    

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்