Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Xiaomi-யின் லேட்டஸ்ட் OS அப்டேட்…MIUI 14 முதலில் இந்த மாடலுக்குத் தான் | MIUI 14 OS Update

Priyanka Hochumin Updated:
Xiaomi-யின் லேட்டஸ்ட் OS அப்டேட்…MIUI 14 முதலில் இந்த மாடலுக்குத் தான் | MIUI 14 OS Update   Representative Image.

மக்கள் தங்கள் பட்ஜெட் விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் அதில் முதன்மையாக இருப்பது Xiaomi தான். மேலும் சமீபத்தில் Xiaomi 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாதனங்களுக்கு புதிய MIUI 14 OS அறிமுகப்பட உள்ளது. எனவே, Mi பயனர்களுக்கு என்ன மாறியான அப்டேட்கள் வரப்போகிறது போன்ற விவரங்களை இந்த பதிவில் பாப்போம்.

இந்த அப்டேட் குறித்து பல கேள்விகள் Xiaomi நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த பதில்கள் இந்த விவரங்களையெல்லாம் தெரிவிக்கிறது.

Xiaomi-யின் லேட்டஸ்ட் OS அப்டேட்…MIUI 14 முதலில் இந்த மாடலுக்குத் தான் | MIUI 14 OS Update   Representative Image

சுமார் 12 வருடங்களாக MIUI Custom OS ஆனது பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதுவரை வெளியான OS-களில் இந்த MIUI 14 OS தான் அனைத்து வகையில் முதன்மையாக இருக்கிறது என்றனர். இதில் அதிக திறன் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். அதிக மக்கள் போனின் மெமரி சீக்கிரம் குறைந்து விடுகிறது என்ற குற்றச்சாட்டு அனைத்து மாடல்களிலும் உள்ளது. இதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்கவே இந்த அப்டேட்டில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜெனெரஷன் MIUI 14 குறைந்த மெமரி பயன்படுத்த அதன் CPU மற்றும் GPU பயன்பாட்டில் பல மாறுதல்களை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான திறன் கிடைக்கும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான 12 OS-ஐ விட 60% ஸ்மூத்தாக இந்த MIUI 14 OS இயங்கும் என்றும் தெரிவித்தனர். போனில் நமக்கு பயன்படாத ஆப்களை தானாகவே Compress செய்து Notifications போன்றவை ஆப் செய்யப்பட்டு Memory-க்கான அளவை குறைகிறது. மேலும் இதில் 8 இன்-பில்ட் ஆப்ஸ் இருக்கிறது, அதனை நம்மால் uninstall செய்ய முடியாது.

Also Read - Xiaomi-யின் புது MIUI 14 அப்டேட்...ட்ரையல் பாக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க!

Xiaomi-யின் லேட்டஸ்ட் OS அப்டேட்…MIUI 14 முதலில் இந்த மாடலுக்குத் தான் | MIUI 14 OS Update   Representative Image

MIUI 14 OS இல் டிசைன் அம்சம் பூக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் கொண்ட Widgets டிசைன் கொண்டு மாற்றப்பட்டுள்ளது. அதே போல் பிரைவசியைப் பற்றி சொல்லவே வேண்டாம் - நம்முடைய அனைத்து உரையாடல்களும் End to End Encryption முறையில் பாதுகாக்கப்படும். அது மட்டும் இல்லாமல் File Merger, text recognition, Extraction போன்ற வசதிகளோடு புதிதாக Xiaomi Control Center என்ற அம்சமும் உள்ளது. இதன் மூலம் Xiaomi ஏர்பட்ஸ், ஸ்பீக்கர் போன்ற பொருட்களை சேர்த்து ஈஸியாக ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்துகொள்ளலாம்.

மேலும் நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு Family Account என்ற அம்சம் மூலம் Cloud Subscription பயன்படுத்தி 9 பேருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். இப்படி பல அம்சங்களைக் கொண்ட MIUI 14 OS ஆனது முதலில் Xiaomi 13 மற்றும் 13 Pro போன்களுக்கு அளிக்கப்படும். இந்த அப்டேட் டிசம்பர் 14 இன்று சீனாவில் வெளியானத்திற்கு பின்னர் மற்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பப்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்