Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Appleயின் புதிய Home Pod Speaker வீட்டில் கார்பன் அளவு அதிகரித்தால் அலாரம் அடிக்குமாம்..!

Manoj Krishnamoorthi Updated:
Appleயின் புதிய Home Pod Speaker வீட்டில் கார்பன் அளவு அதிகரித்தால் அலாரம் அடிக்குமாம்..!Representative Image.

Apple என்றாலே நமக்கு விருப்பமான பிராண்டு என தெரியும். இதன் ஒவ்வொரு லான்ச் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஜிட்டல் மையமான நம் வாழ்வில் வீட்டில் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் ஒவ்வொன்றாக ஸ்மார்ட் வெர்ஷனாக மாறுகிறது.  ஆப்பிள் தன் அடுத்த உற்பத்தியான Home Pod யை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள 2nd gen Home Pod Speaker பற்றி காண்போம். 

Appleயின் புதிய Home Pod Speaker வீட்டில் கார்பன் அளவு அதிகரித்தால் அலாரம் அடிக்குமாம்..!Representative Image

Home Pod Speaker 2nd Gen

இன்று அறிமுகம் செய்த Apple Home Pod Speaker 2018 அறிமுகம் செய்த மாடலின் இரண்டாவது ஜெனரேஷன் ஆகும். இந்தியாவில் 2023 பிப்ரவரி 3 முதல் விற்பனைக்கு தயாராகும் Apple Home Pod Smart Speaker யின் விலை 32,990 ரூபாய் ஆகும். Siri Intelligence மூலம் செயல்படும் Home Pod 2 Speaker ஐபோன் மூலம் செயல்படுத்த முடியும். 

இந்த Home Pod 2  Speaker யில் 100 மில்லியன் பாடல்கள் வரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்கமுழுக்க ரீசைக்கிள் செய்யப்படும் msh fabric மூலம் உருவானது ஆகும்.  டிசைனிங் பொருத்தவரை 1st Gen போலவே தான் இருந்தாலும் சிறிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் டச் பேனல் பயன்படுத்த எளிமையாக இருந்தாலும் HomePod mini அமைப்பில் தான் உள்ளது. துல்லியமான சவுண்ட் குவாலிட்டி அளிக்கும் 4 இன்ச் high excursion woofer பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 20 mm மோட்டார் நமக்கு இரைச்சல் இல்லாத ஆடியோ அளிக்கும் திறனை உருவாக்கும். 

Wifi மற்றும் Bluetooth 5.0 சேவையில் செயல்படும் திறன்  கொண்ட Home Pod 2 Speaker பயன்படுத்த எளிமையாக இருக்கும். இதில் புதியதாக சேர்த்துள்ள temperature & humidity sensor நமக்கு வீட்டில் கார்பன் மோனாக்ஸைட் அளவு அதிகரித்தால் அலாரம் செய்யும். இந்த சேவை நம் வீட்டை நவீன மையமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்