Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனிமே அதுஇல்ல.. இதுதான்.. முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கும் நான்கு புதிய ஐபோன் மாடல்கள்.. விலை? | iPhone 15 Series Price in India 2023

Nandhinipriya Ganeshan Updated:
இனிமே அதுஇல்ல.. இதுதான்.. முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கும் நான்கு புதிய ஐபோன் மாடல்கள்.. விலை? | iPhone 15 Series Price in India 2023Representative Image.

ஐபோன் பயனர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, ஐபோன் 15 சீரிஸில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max என்ற நான்கு புதிய ஐபோன் மாடல்கள் வெளியாகவுள்ளது. இதனால் ஐபோன் 15 சீரிஸ் பற்றிய பல விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டன. அந்தவகையில், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இனிமே அதுஇல்ல.. இதுதான்.. முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கும் நான்கு புதிய ஐபோன் மாடல்கள்.. விலை? | iPhone 15 Series Price in India 2023Representative Image

முக்கியமாக வரவிருக்கும் மாடல்களில் ஒரு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் பிறப்பித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நான்கு புதிய மாடல்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நான்கு மாடல்களுமே 35W வரை ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெறும். டிஸ்ப்ளேவை பொறுத்தவரையில், iPhone 15 மற்றும் 15 Plus இரண்டும் 6.1 இன்ச் OLED டிஸ்பிளேவையும், iPhone 15 Pro மற்றும் 15 Pro Max இரண்டும் 6.7 இன்ச் OLED டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். iPhone 15 மற்றும் iPhone 15 Plus ஏ16 பயோனிக் சிப்செட் மூலமும், iPhone 15 Pro மற்றும் 15 Pro Max ஏ17 பயோனிக் சிப்செட் மூலமும் இயக்கப்படுகிறது.

ஐபோனில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது கேமரா தான். அந்தவகையில், iPhone 15 மற்றும் 15 Plus மாடல்கள் டபிள் ரியர் கேமரா அமைப்பையும்; iPhone 15 Pro மற்றும் 15 Pro Max மாடல்கள் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கும். ஆனால், டாப் வேரியண்ட்டான 15 Pro Max மாடலில் மட்டும் 3X ஜூம் லென்ஸுக்கு பதிலாக 5X - 6X பெரிஸ்கோப் ஜூம் லென்ஸை கொண்டிருக்கும். மேலும், 15 Pro Max பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் பொருத்தப்பட்ட முதல் ஐபோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாடல்களுமே 48 எம்பி பின்புற மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமராவை கொண்டிருக்கும்.

இனிமே அதுஇல்ல.. இதுதான்.. முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கும் நான்கு புதிய ஐபோன் மாடல்கள்.. விலை? | iPhone 15 Series Price in India 2023Representative Image

தோற்றம் ஒரே மாதிரியாக இருந்தாலும், தற்போதைய ப்ரோ மாடல் போனின் வெயிட் பற்றிய பலரின் கவலையை நிவர்த்தி செய்துள்ளது. பொதுவாக, ஐபோன்களில் அலுமினியம் பிரேம்கள் பயன்படுத்தப்படுவதால், மற்ற ஸ்மார்ட்களை காட்டிலும் சற்று வெயிட் அதிகமாக இருக்கும். வரவுள்ள iPhone 15 மற்றும் 15 Plus மாடல்களும் அலுமினிய பிரேம்களே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ப்ரோ மாடல்களான iPhone 15 Pro 15 Pro Max -இல் அலுமினியத்திற்கு பதிலாக டைட்டானியம் பிரேம்கள் பயன்படுத்தப்படுகிறது.

iPhone 15 மற்றும் iPhone 15 Plus இரண்டு மாடல்களும் 6 ஜிபி ரேம் + 128/256/512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. அதேபோல், ப்ரோ மாடல்கள் இரண்டும் 6/8 ஜிபி ரேம் + 256/512 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. விலையை பொறுத்தவரை, ஐபோன் 15 சீரிஸின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், தகவல்களின் படி iPhone 15 மற்றும் 15 Plus மாடல்களின் விலையானது iPhone 14 ஐப் போலவே இருக்கலாம். இருப்பினும், iPhone 15 Pro மற்றும் 15 Pro Max மாடல்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்