Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.20000க்குள் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ! | Best Smartphones Under 20000 in India

Nandhinipriya Ganeshan Updated:
ரூ.20000க்குள் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ! | Best Smartphones Under 20000 in IndiaRepresentative Image.

நம்மில் பலரும் சிறந்த தரத்துடன், குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி, சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் அல்லது ஏற்கனவே இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புவோர் முதலில் இதை தெரிந்துக்கொண்டு புதிய போனை வாங்குங்கள். ஏனென்றால், தற்போது வெறும் 20,000 ரூபாய்க்குள் நல்ல தரமான ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அந்தவகையில், ரூ.20000க்குள் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்ஃபோன்களை பட்டியலிட்டுள்ளோம்.

Oneplus Nord CE3 Lite 5G:

ஒன்ப்ளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5G மொபைல் 20000 ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டிருக்கும். 6.72 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 108 எம்பி பின் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போனில் ஹைப்ரிட் டூயல் சிம் அமைப்பு உள்ளது. இதன் விலை ரூ.19,999 ஆகும். 

IQQ Z7 5G:

IQQ Z7 5G ஸ்மார்ட்போனில் 920 SoC MediaTek டைமென்சிட்டி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் ரூ.18,999 க்கு வாங்கக் கிடைக்கிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட் கொண்ட 6.72-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. கேமராவை பொறுத்தவரை, 108 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Samsung Galaxy M34:

20000 க்கு கீழ் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களில் இந்த Samsung Galaxy M34 போனும் ஒன்று. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டுடன் கூடிய 6.5-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதிலுள்ள 6000 mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. இந்த போனில் 50 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ள இந்த போனின் விலை ரூ.19,775 ஆகும்.

Motorola Moto G73:

டபுள் சிம் போர்ட் வசதியுடன் வரக்கூடிய  Motorola Moto G73 ஆனது Mediatek Dimensity 930 octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 120 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டுடன் கூடிய 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, 50 எம்பி மற்றும் 8 எம்பி டபுள் ரியர் கேமராவையும், 16 எம்பி அல்ட்ராபிக்செல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. பிரத்யேகமாக 1டிபி வரை ஸ்டோரேஜை அதிகரித்துக்கொள்ளும் விதமாக மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. இதன் விலை ரூ.16,999.

ரூ.20000க்குள் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ! | Best Smartphones Under 20000 in IndiaRepresentative Image

Realme Narzo 60 5G:

Dimensity 6020 Octa-Core செயலி மூலம் இயக்கப்படும் இந்த Realme Narzo 60 ஸ்மார்ட்போனில், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டுடன் கூடிய 6.43 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த போன், 64 எம்பி+24 எம்பி இரட்டை பின்பக்க கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராவுடன் வருகிறது. 1டிபி வரை மெமரி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.19,999.

Realme 12:

Realme 12 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதிலுள்ள 5000 mAh பேட்டரி, 67 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், வாட்டர் டிராப் நாட்ச், மற்றும் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 50 எம்பி + 2 எம்பி ட்ரிபிள் ரியர் பின்பக்க கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்கும் இந்த போனின் விலை ரூ.15,990.

Vivo T2 5G:

Vivo T2 5G ஆனது Qualcomm SM 8250-AC Snapdragon 870 5G Octa-core செயலி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டுடன் 6.62 இன்ச் FHD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இது 4700 mAh பேட்டரி, ஒரு USB Type-C போர்ட் மற்றும் 5G உடன் டபுள் சிம் ஸ்லாட் வசதியையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 16,999 மட்டுமே.

Oppo A74 5G:

20000 ரூபாய்க்குள் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. இதில் 48 எம்பி கேமரா சிறப்பம்சமாகும். மேலும் இந்த போனில் 6.49 இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் என பல வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 15,490 மட்டுமே.

Redmi Note 11T 5G:

20000 க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் என்று வரும்போது Redmi எப்போதும் வாடிக்கையாளர்களின் சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது. MediaTek Dimensity 810 Octa-core 5G பிராசஸர், 6nm HyperEngine 2.0 போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மற்றும் 2.4GHz வரை கடிகார வேகத்துடன் வருகிறது. 2 மாதங்களுக்கு Youtube பிரீமியம் இலவசம். இந்த மொபைலின் விலை ரூ. 18,499 ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்