Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிளிப்கார்ட்டில் ரூ.8,499/-க்கு லேட்டஸ்ட் ரியல்மி சி 51 சேல் தொடக்கம்! | Realme C51 Flipkart Sale

Priyanka Hochumin Updated:
பிளிப்கார்ட்டில் ரூ.8,499/-க்கு லேட்டஸ்ட் ரியல்மி சி 51 சேல் தொடக்கம்! | Realme C51 Flipkart SaleRepresentative Image.

மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் அதிக பயனாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், நேற்று பிளிப்கார்ட்டில் ரியல்மி சி 51 என்னும் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது. மலிவு விலையாக வெறும் ரூ.8,499/-க்கு 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங், 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட் போன்ற அம்சங்களுடன் கிடைக்கும் என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள். இந்த மாடலின் முழு விவரக்குறிப்பு, அம்சம் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.

பிளிப்கார்ட்டில் ரூ.8,499/-க்கு லேட்டஸ்ட் ரியல்மி சி 51 சேல் தொடக்கம்! | Realme C51 Flipkart SaleRepresentative Image

ரியல்மி சி 51 5ஜி விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட ஆதரவுடன் 6.7-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 OS மூலம் இயங்குகிறது.

50எம்பி மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கிய டூயல் ரியர் கேமரா உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு, 5எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரியர் கேமரா ஒரு எச்டிஆர் (HDR) கேமரா என்பதால் பனோராமிக் வியூ (Panoramic View), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), டைம் லேப்ஸ் (Timelapse) மற்றும் ஸ்லோவ் மோஷன் (Slow Motion) உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. செல்பீ கேமரா பியூட்டி மோட் (Beauty Mode), போக்கே எஃபெக்ட் (Bokeh Effect) உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

பிளிப்கார்ட்டில் ரூ.8,499/-க்கு லேட்டஸ்ட் ரியல்மி சி 51 சேல் தொடக்கம்! | Realme C51 Flipkart SaleRepresentative Image

இந்த மாடல் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும். கூடுதலாக, 2 டிபி வரையில் மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு அளிக்கப்பட்டுள்ளது.இறுதியாக, 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் மற்றும் மினி கேப்சூல் (Mini Capsule) நோட்டிபிகேஷன் அம்சம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இந்த மாடல் கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய 2 கலர் ஆப்ஷனில் வருகிறது.  4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.8,999/-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம். மேலும் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், ரூ.500/- தள்ளுபடி கிடைப்பதால் ரியல்மி சி 51 போனை ரூ.8,499/-க்கு வாங்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்