Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,573.83
232.75sensex(0.30%)
நிஃப்டி23,587.65
49.80sensex(0.21%)
USD
81.57
Exclusive

Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?

Priyanka Hochumin October 10, 2022 & 21:00 [IST]
Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?Representative Image.

Bus 375 in Tamil: இந்த பிரபஞ்சத்தில் அறிவியலையும் தாண்டி நிறைய அமானுஷ்ய சம்பவங்க நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் நம்பினால் நம்மால் இயல்பான வாழ்க்கையை வாழவே முடியாது. இருப்பினும் நம்மை அறியாத ஒரு ஆர்வம் ஏற்படும். எப்படி சிறு குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி கதை சொல்வார்களோ அதே போன்று அதனை ஒரு கதையாக எடுத்துக்கொண்டால் நமக்கு ஒரு சுவாரசியம் கிடைக்கும். அப்படியான ஒரு உண்மை சம்பவத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?Representative Image

90-களில் நடந்ததாக கூறப்படுகிறது....

நவம்பர் 14, 1995 ஆம் வருடம் பெய்ஜிங், Yuan-ming இடத்தில் இருந்து இரவு 11 மணிக்கு பஸ் நம்பர் 375 தயாராக இருந்தது. இந்த பஸ் செல்லும் வழி எண் தான் 375, மேலும் அந்த பேருந்து Fragrant Hills என்று அழைக்கப்படும் சியாங்-ஷான் இடத்திற்கு செல்ல உள்ளது. பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் கிளம்பியது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் இறங்க, கடையசியில் பஸ் டிரைவர், கண்டக்டர், ஒரு பாட்டி அல்லது தாத்தா மற்றும் ஒரு இளைஞன் என்று மொத்தம் நான்கு பேர் மட்டுமே இருந்தனர்.

காட்டு பகுதிக்கு நடுவில் பேருந்து இறுதி ஸ்டாப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இடையில் மூன்று பேர் கை ஆசைப்பதை டிரைவர் பார்த்து பேருந்தை நிறுத்துகிறார். அவர்கள் மூவரும் உள்ளே ஏறி பின் சீட்டில் அமர்கின்றனர்.

Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?Representative Image

16 ஆம் நூற்றாண்டை சேர்த்தவர்கள்....

அதில் இருவர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நபர்கள் போல உடை அணிந்திருந்தனர். அதை பார்த்ததும் அந்த பாட்டிக்கும் இளைஞனுக்கும் ஒரு பயம் ஏற்படுகிறது. ஆனால் அந்த டிரைவரோ அவர்கள் ஏதாவது நாடகத்துக்கு நடிச்சிட்டு அப்படியே வந்திருப்பாங்கன்னு சொல்றாங்க. பஸ் அப்படியே போய் கொண்டிருக்கையில் திடீரென ஒரு அலறல் சத்தம். அந்த பாட்டி அங்கிருந்த இளைஞனை அடித்து என்னுடைய பர்ஸ எதுக்கு திருடுனன்னு சத்தம் போடறாங்க. அவனுக்கா எதுவும் புரியல. மொதல்ல பஸ்ஸ பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்துங்கன்னு ஒரே ஆர்ப்பாட்டம். ஒருவழியா பஸ்ஸ நிறுத்தி அந்த பாட்டியையும் அந்த பையனையும் நடுளையே இறக்கி விடுறாங்க. பஸ் கிளம்பும் போது பின் சீட்ல இருக்குற அந்த மூனு பேரும் அந்த பாட்டிய மொறச்சிகிட்டே போறாங்க.

Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?Representative Image

பாட்டி தெரிந்த உண்மை...உறைந்து போன இளைஞன்!

அந்த பையன் என்ன பாட்டி போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னீங்க எதுவும் இல்லனு கேக்குறான். ஒன்னும் இல்லப்பா, உன்னைய காப்பாத்துரத்துக்கு தான் நா பொய் சொன்னேன்னு சொல்றாங்க. பஸ்ல பின்னாடி இருந்த மூன்று பேர பாத்தாலே ஏதோ வினோதமே இருந்துச்சு. அவங்க மனுசங்க இல்லைன்னு தொணிக்கிட்டே இருந்துச்சு. அப்ப அவங்கள கவனிக்கும் போது அவங்களுக்கு காலே இல்லைனு தெரிஞ்சிகிட்டேன். அதான் அப்படி நடந்துக்கிட்டேன்னு சொல்றாங்க. அவனுக்கா இத நம்பலாமா, வேணாமான்னு ஒரே குழப்பம். சரி நாம தப்பிச்சோம் அதுவரைக்கும் போதும்னு கெளம்புறாங்க.

Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?Representative Image

போலீஸ் அரண்டு போய்ட்டாங்க...

அந்த பாட்டி உடனே நடந்தத போலீஸ்க்கு போன் பண்ணி சொல்றாங்க. ஆனா அவங்க அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கல. ஆனா அடுத்த நாளே இந்த மாறி பஸ் 375 காணோம்னு புகார் வருது. உடனே நேத்து அந்த பாட்டி சொன்னது அவங்களுக்கு ஞாபகம் வருது. அப்ப மொத அந்த பாடிய கண்டுபிடிக்கணும்னு தேடுறாங்க. அப்புறம் விசாரிக்கிறாங்க, என்ன நடந்ததுன்னு. பிறகு அந்த பஸ்ச தேடுறாங்க கிடைக்கவே இல்லை. அப்புறம் பாத்தா ஒரு 100 கீமி தாண்டி ஒரு ஏறில பஸ் கிடைக்குது. அதை எடுத்து பார்த்த உடனே அதிர்ச்சி அடையாங்க போலீஸார். அதுக்குள்ள இரண்டு பாதிக்கு மேல அலிகிபோன உடல்கள் இருக்குது.

Bus 375 in Tamil: பஸ் நம்பர் 375...உலகை உலுக்கிய...மர்ம! உண்மை சம்பவமா?இல்லையா?Representative Image

எந்த தடயமும் இல்லாத மர்மம்....

ஏதாவது தடயம் கிடைக்குமான்னு தேடி பார்க்குறாங்க, ஆனா எதுவும் கிடைக்கல. சரி எப்படி இவ்ளோ தூரம் வர பெட்ரோல் விருந்துக்கும் என்ற சந்தேகத்தில் டாங்க ஓபன் பண்ணி பாத்தா, அதில் இருந்தது ரத்தம். சரி இங்க எப்படி வந்துருக்கும் என்பதை கண்டுபிடிக்க சிசிடிவிய தேடி பாக்கும் போது அதுல அந்த பஸ் அந்த வழியா வந்ததுக்கான எந்த ஒரு தடயமும் இல்ல. அதனால் இன்று வரை இந்த மர்மத்திற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. இந்த் சம்பவம் குறித்த செய்தி பெரும் பரபரப்பை அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தியது.

இது உண்மையா என்று பார்த்தால், அது ஒரு "Urban Story" என்று நிறைய பேர் கூறுகிறார்கள். அதாவது வழிவழியாக சொல்லபப்டும் ஒரு கதை என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்