Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புரட்டாசில ஏன் இதெல்லாம் பண்ண கூடாது.. சயின்ஸ்ல அந்த கான்செப்டே.. இல்லையேடா!

Priyanka Hochumin October 14, 2022 & 21:00 [IST]
புரட்டாசில ஏன் இதெல்லாம் பண்ண கூடாது.. சயின்ஸ்ல அந்த கான்செப்டே.. இல்லையேடா!Representative Image.

சைவம் சாப்பிட்றவங்களுக்கு எல்லா மாதமுமே கிட்டத்தட்ட ஒரே மாறி தான் இருக்கும். ஆனா அசைவம் சாப்பிட்றவங்களுக்கு  புரட்டாசி மாசம் வந்தா மட்டும் பாவம் திகைச்சி போய்டுவாங்க. எப்படா அந்த ஒரு மாசம் முடியும்னு காத்திட்டு இருப்பாங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இப்ப எதை பத்தி சொல்றேன்னு. ஆமாங்க ஏன் புரட்டாசி மாசத்துல நாம அசைவம் சாப்பிட கூடாது? இந்த கேள்வி நம்ப எல்லாத்துக்குமே இருக்கும். ஆனா இதுக்கு அறிவியல் ரீதியாக பதில் யாருகிட்டையும் இல்ல. வீட்ல பெரியவங்க கிட்ட கேட்டா, எனக்கு தெரியாது எங்க தாத்தா பாட்டி சொன்னதை நான் உனக்கு சொல்றேன்னு சொல்லிட்டு போய்டுவாங்க. நம்ப உலக நாயகன் கமல் சொல்றது போல, பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயலாம் கூடாது போல தான் நடக்கும்.

புரட்டாசில ஏன் இதெல்லாம் பண்ண கூடாது.. சயின்ஸ்ல அந்த கான்செப்டே.. இல்லையேடா!Representative Image

பொதுவா சொல்ற விஷயம்....

புரட்டாசி மாசம் ஆரம்பிக்கும் போது குறைவான மழை பெய்ய ஆரம்பிக்கும், அதுனால் பூமி அதுவரை தேக்கி வைத்திருந்த வெப்பத்தையெல்லாம் வெளியேற்றும். இதுனால சுற்றுசுழலல்ல மாற்றம் ஏற்பட்டா நமக்கு காலரா, ஹெப்பாடிட்டீஸ் போன்ற நோய்கள் அதிகம் வரலாம். இப்படியான நோயால நாம அவதிப்பட கூடாதுன்னு தான் புரட்டாசி மாசத்துல நம்மோட முன்னோர்கள் அந்த காலத்துலையே அசைவம் சபைதா கூடாதுனு சொல்லிருக்காங்க. மேலும் பெருமாள் கோவிலுக்கு போய் துளசி தீர்த்தம் வாங்கி சாப்பிட்டா இந்த நோய் வராமல் பாத்துக்கலாம்னு நிறைய பேர் சொல்லிருப்பாங்க. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

புரட்டாசில ஏன் இதெல்லாம் பண்ண கூடாது.. சயின்ஸ்ல அந்த கான்செப்டே.. இல்லையேடா!Representative Image

புரட்டாசி மாசத்துல மட்டும் தான் வெப்பம் அதிகரிக்குமா?

பூமிக்கு வரும் சூரிய ஒளியானது ஆகாயத்துல இருக்குற மேகங்களாலும், கீழே இருக்கும் தரையாலும் தினமும் பிரதிபலித்துக் கொண்டே இருக்குமாம். அப்படி அது மட்டும் நடக்கலைனா பூமி ஒன்னு கொதிக்கும் சூரியனை போல அல்லது ஒரு குளிர் பந்து போல ஆகிடுமாம். இது பூமியில மட்டும் இல்ல சூரிய குடும்பத்துல இருக்குற எல்லா கிரகத்திலும் நடக்கும் ஒரு செயல்முறை தான்.

புரட்டாசில ஏன் இதெல்லாம் பண்ண கூடாது.. சயின்ஸ்ல அந்த கான்செப்டே.. இல்லையேடா!Representative Image

அப்ப நோய் ஏற்படுறது....

முதல்ல காலரா என்னும் நோய் வந்து விப்ரோ காலரா பாக்டீரியாவால தான் ஏற்படுத்து. இந்த பாக்டீரியாவால் மாசுபடுத்தப்பட்ட உணவையோ அலல்து தண்ணீரையோ நான் உண்ணும் போது அந்த நோய் ஏற்படுத்து. அடுத்து ஹெப்பாடிட்ஸ் வந்து ஒரு வைரஸால் ஏற்படும் நோய், அது கல்லீரலை தான் பாதிக்கும். நாம் உண்ணும் உணவை ஒழுங்கா சமைக்காமல் சாப்பிடும் போது இந்த நோய் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிறகு துளசி பயன்படுத்தி குணப்படுத்திடலாம் என்று கூறும் விஷயம் இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க படவில்லை. புரட்டாசியைப் பற்றி நம் முன்னோர்கள் குறியும் விஷயங்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் எதுவும் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்