Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!

Vaishnavi Subramani Updated:
செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image.

செவ்வாய்க் கிரகத்தில் பல ஆராய்ச்சி செய்து அந்த இடத்தில் அரிசி பயிரிடலாம் எனக் கண்டறிந்தனர். பூமியிலிருந்து மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் செவ்வாய்க் கிரகத்திற்கு எடுத்துச் செல்வது என்பது நடக்காது மற்றும் அதற்கு அதிகமாகச் செலவுகள் ஆகும். அதனால் அங்கு உள்ள மண்ணை பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த அரிசி பயிரிடும் முயற்சி. இந்த பதிவில் செவ்வாய்க் கிரகத்தில் நெல் பயிரிடலாமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image

செவ்வாய்க் கிரகத்தில் நெல் பயிரிடலாமா ?

✤ செவ்வாய்க் கிரகத்தில் உள்ள மண்ணில் நெல் செடிகள் வளர்ப்பதற்கான ஊட்டச்சத்துகள் உள்ளது எனப் பரிசோதனைகளில் தெரிகிறது. செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள அழுக்குகளில் பெர்குளோரேட் என்ற ரசனைகள் அதிகமாக உள்ளது. அது தாவரங்கள் வளர்ச்சியைத் தடுக்கும்.

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image

பெர்குளோரேட் என்றால் என்ன?

✤ பெர்குளோரேட் என்பது ஒரு ரசாயனப் பொருள்கள். இது செவ்வாய்க் கிரக மண்ணில் உள்ளது. அந்த ரசாயனகலவையில் ராக்கெட் மற்றும் எரிபொருள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.

✤ இது செவ்வாய்க் கிரகத்தில் உள்ள மண்ணில் அதிகமாக உள்ளதால் அதில் தாவரங்களை வளர்க்க முடியாது.

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image

நெல் பயிரிடுவது ஏன்?

✤ பிற பயிர்களை காட்டிலும் இந்த நெல் பயிர் ஆனது மேலே உள்ள தோலை எளிதில் நீக்கவும் மற்றும் அதிகமாகவும் பயிரிடுவதற்கு உதவும்.

✤ மற்ற உணவுகளை விட மனிதர்கள் இந்த அரிசியை தான் தினமும் சாப்பிடுகின்றனர். அதனால் தான் இந்த ஆய்வுமிகவும் முக்கியமானது.

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள மண்ணின் ஆய்வு

✤ மார்ச் 13 அன்று டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த கிரக மற்றும் கிரக அறிவியல் மாநாட்டில் அபிலாஷ் ராமச்சந்திரன்  அவர்கள் இந்த நெல் பயிரிடுவதைப் பற்றி தெரிவித்தார். அது எப்படி சாத்தியம். அதற்கு அவர் செய்த ஆராய்ச்சியைப் பற்றிப் பார்க்கலாம்.

✤ ராமச்சந்திரன் மற்றும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து பல சிறிய தொட்டிகளில் மண்கள் மற்றும் நெல் விதைகள் வைத்து வளர்த்தனர்.

✤ அதில் சில தொட்டிகளில் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பொர்குளோரேட் பயன்படுத்தி வளர்த்தனர். தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை தண்ணீர் விட்டு வளர்த்தினர்.

✤ அதில் சாதாரணமாக வளர்ந்த செடிகளை விட பொர்குளோரேட் பயன்படுத்தி வளர்ந்த செடிகள் சற்று குறைவான வளர்ச்சி இருந்தது.

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image

✤ அதற்குக் காரணம் பொர்குளோரேட் தான் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

✤ அதை எப்படி எதிர்கொள்வது என அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க ராமச்சந்திரன் மற்றும் அவர் நண்பர்கள் சேர்ந்த அனைத்து நெல் வகைகளை வளர்த்தி அதிலிருந்து ஒன்றைக் கண்டறிந்தனர்.

✤ அது காடுகளில் வறட்சியான பகுதிகளில் வளரும் நெல் விதையை பற்றிதெரிந்து கொண்டனர். அதில் சில ஜீன் அமைப்பை மாற்றி மீண்டும் வளர்த்தினர். அதில் பொர்குளோரேட் இருந்தாலும் அதை எதிர்த்து இந்த நெல் விதை வளரும் எனக் கண்டறிந்தனர்.

செவ்வாய் கிரகத்தில் நெல் பயிரிடலாமா !!!Representative Image

✤ அதனால் சராசரியாக நெல் பயிர் வளர்ச்சி ஒரு கிலோ கிராம் மண்ணில் மூன்று கிராம் பெர்குளோரேட் இருந்தால் அதில் நெல் வளராது.

✤ ஆனால் மூன்று கிராம் பெர்குளோரேட் பதிலாக ஒரு கிராம் ஆக இருந்தால் அங்கு நெல் பயிர்கள் விலையும் எனக் கண்டறிந்தனர்.

✤ இந்த ஆய்விலிருந்து தெரியவருவது என்னவென்றால் செவ்வாய்க் கிரகத்தில் நெல் பயிர்கள் வளர்க்க முடியும்.

✤ இதில் தாவரத்தின் snRkta என்ற ஜீனை மாற்றுவதனால் அது வறட்சியான சூழ்நிலை மற்றும் பெர்குளோரேட் எதிர் கொண்டு வளரும் தன்மை உள்ளது. அதனால் செவ்வாய்க் கிரகத்தில் நெல் பயிர்கள் வளர்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்