Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெப்ப அலை என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது தெரியுமா..? | Veppa Alai 2023

Gowthami Subramani Updated:
வெப்ப அலை என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது தெரியுமா..? | Veppa Alai 2023Representative Image.

காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை, வெப்ப அலை போன்றவை ஏற்படுகிறது. பொதுவாக, இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் இதன் தீவிரத்தன்மை அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக வெப்ப அலை காரணமாக, அதிக அளவு வெப்பநிலை நிலவும். இந்த நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்தியாவில் இதன் தாக்கத்தால், ஏப்ரல் / மே 2025 சமயத்தில் பல்வேறு இடங்களில் 2000-க்கும் அதிகமான நபர்கள் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
 

வெப்ப அலை என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது தெரியுமா..? | Veppa Alai 2023Representative Image

வெப்ப அலை என்றால் என்ன?

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட அளவிலான டிகிரி செல்சியஸ் அளவு அதிகமாகும் போது வெப்ப அலை நிகழ்வு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபடும். அதன் படி, சமவெளிப் பகுதிகளில் குறைந்தது இருநாள்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலான அளவில் வெப்பநிலை இருக்கும். அதே போல, மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்.
 

வெப்ப அலை என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது தெரியுமா..? | Veppa Alai 2023Representative Image

வெப்ப அலை தீவிரத்திற்கான முக்கிய காரணம்

பொதுவாக காற்றில் சிக்கிக் கொண்ட வெப்பத்தின் விளைவு காரணமாக வெப்ப அலைகள் ஏற்படுகிறது. அதாவது, காற்றில் உள்ள வெப்பமானது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும் போது இந்த அலைகள் ஏற்படுகின்றன.

இந்த வெப்ப அலையானது, இந்தியாவில் மார் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இந்த நேரங்களில் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பம் உயர்கிறது. இந்த இடத்தில் வெப்பநிலை 45-50 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது.

வெப்ப அலை என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது தெரியுமா..? | Veppa Alai 2023Representative Image

சுழல் வடிவக் காற்று

சூரிய வெப்பம் காரணமாக, கடலின் மேற்பரப்பில் இருக்கும் காற்று சூடாகி விரிவடைந்து மேலே செல்கிறது. இவ்வாறு செல்லும் போது, காற்று நீராவியாக மாறி மழை தரக்கூடிய முகில்களை உருவாக்குகிறது. இந்த நிகழ்வே, சூறாவளி என அழைக்கப்படுகிறது.

இதில், எதிர்-சூறாவளியின்போது வளிமண்டலத்தில் உள்ள காற்று கீழ்நோக்கி வந்து பூமியின் மேற்பரப்பை அடைகிறது. கீழ் நோக்கி வரும் போது, அமுக்கம் ஏற்படுவதால் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இவ்வாறு பூமியின் மேற்பரப்பை அடைந்த பிறகு, வெப்பக் காற்று எங்கும் செல்ல முடியாமல் அங்கேயே தங்கி விடுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்