Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடலில் தொலைத்த ஃபோனை 465 நாட்கள் கழித்து எடுத்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்..

Nandhinipriya Ganeshan Updated:
கடலில் தொலைத்த ஃபோனை 465 நாட்கள் கழித்து எடுத்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்..Representative Image.

மற்ற நிறுவனத்தின் சாதனங்களை விட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உண்டு. இதற்கு காரணம், தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வரும் நிறுவனத்தின் சாதனங்களே. விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரத்தில் சிறந்து விளங்குவதால், இவ்வுலகில் அதிக வருமானம் ஈட்டும் டெக் நிறுவனமான ஆப்பிள் நிமிர்ந்து நிற்கிறது. சமீபத்தில் கூட இந்நிறுவனத்தில் ஸ்மார்ட் வாட்ச் உயிர்க்கு ஆபத்தநிலையில் பலரையும் காப்பாற்றியிருக்கிறது. 

கடலில் தொலைத்த ஃபோனை 465 நாட்கள் கழித்து எடுத்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்..Representative Image

இந்தநிலையில், ஒரு பெண் சுமார் ஒருவருடத்திற்கு முன்பு கடலில் தொலைத்த ஐபோன், 465 நாட்கள் கடலுக்குள் கிடந்து, தற்போது கரை ஒதுங்கியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை நாட்கள் கடலில் கிடந்தும் அந்த ஐபோன் இப்பவும் வேலைசெய்கிறதாம். கேட்கவே, வியப்பாக இருக்கிறது அல்லவா?. அப்போ ஐபோனின் தரம் எப்படி இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்கள். சரி, எப்படி அந்த பெண் கடலில் போனை தொலைத்தார், எப்படி மீண்டும் கரை ஒதுங்கியது? வாங்க விரிவாக பார்க்கலாம்.

கடலில் தொலைத்த ஃபோனை 465 நாட்கள் கழித்து எடுத்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்..Representative Image

கிளார் அட்ஃபீல்டு (வயது 39) என்ற பெண் கடந்த ஆகஸ்ட் 2021 வாக்கில் கடலில் சர்ஃபிங் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது தனது போன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டில் கொள்வது வழக்கம். எப்போதும் கவனமாக இருந்த கிளார் அன்றைய தினம் பார்த்து எப்படியோ எதிர்பாராத விதமாக, தன்னுடைய ஃபோனை (iphone 8 plus) கடலில் தொலைத்துவிட்டார். ஆனால், 465 நாட்களுக்கு பிறகு காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இந்த போனை ஒரு நாய்(பிராட்லி) கண்டுபிடித்திருக்கிறது. 

கடலில் தொலைத்த ஃபோனை 465 நாட்கள் கழித்து எடுத்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்..Representative Image

மேலும், அந்த ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் கிளார் அட்ஃபீல்டின் தாயின் மருத்துவ விவரங்கள் கொண்ட ஒரு அட்டை இருந்திருக்கிறது. அதைவைத்து, கிளார் அட்ஃபீல்ட்டை தொடர்பு கொண்டு, அந்த ஃபோனை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய கிளார், 'தொலைந்து போன என்னுடைய ஃபோன் மீண்டும் கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. அதுவும் 465 நாட்கள் கடலில் இருந்தும், மீண்டும் வேலை செய்கிறது. இதை என்னால் நம்ப முடியவில்லை' என்று கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்