Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி F14 Frevolution 5G..

Nandhinipriya Ganeshan Updated:
பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி F14 Frevolution 5G.. Representative Image.

ஸ்மார்ட்ஃபோன் என்பது கனக்டிவிட்டி, கேமிங், சோஷியல் மீடியா, சிறந்த கேமரா வசதிகள் என இளைஞரின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களின் படைப்பு திறனை அவர்களே அறிவதற்கும் உதவுகிறது. இத்தகைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக சாம்சங் ஒரு நவீனமான ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.

இளைஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு அனைத்து அம்சங்களையும் கொண்ட கேலக்ஸி F சீரிஸ் முத்திரையை கொண்டு Galaxy F14 Frevolution 5G வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி F14 Frevolution 5G.. Representative Image

Galaxy F14 Frevolution 5G சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் ஒரே சார்ஜில் இரண்டு நாட்கள் நீடிக்கும் அதிக திறன் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. கூடுதலாக கண் இமைக்கும் நேரத்தில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக ஸ்மார்ட்போனை உடனடியாக சார்ஜ் செய்ய இயலும்.

இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் 5G நெட்ஒர்க் உள்ளது, சாம்சங் அதை கவனத்தில் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி இணைப்பை சேர்த்துள்ளது. எனவே, லோடிங் பற்றிய கவலையே வேண்டாம் எந்த நேரத்திலும் அதிவேக இண்டர்நெட் கிடைக்கும்.

சாம்சங் Galaxy F14 5G ஸ்மார்ட்போனில் 5nm Exynos 1330 Processor ஐ சேர்த்துள்ளது. இந்த Processor இளைஞர்களுக்கு தேவையான அதிவேகமான மற்றும் சிறந்த ஆற்றலை கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பொறுத்தவரை, அட்டகாசமான 16.72cm (6.6 இன்ச்) முழு HD+ 90HZ டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திரை போதவில்லை என்றால், திரையை வேகப்படுத்தும் 90HZ பேனலும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பான கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் எதிர்பாராத விதமாக கிழே விழுந்தாலும் பயமில்லை.

Galaxy F14 5G ஆண்ட்ராய்டு 13இல் இயங்கும் One Core UI 5.1 கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான அம்சங்களை பெறலம். மேலும், 2 முறை OS அப்டேட் மற்றும் 4 முறை அதன் செக்கியூரிட்டி அப்டேட்கள் அளிக்கப்படும். இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட Galaxy F14 Frevolution 5G பட்ஜெட் விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் முதலில் வாங்க நினைத்தால் Samsung.com அல்லது Flipkart சென்று பார்வையிடுங்கள் பல தகவல்களை பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்