Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

jayam ravi upcoming movie 2022 ஹரியுடன் இணையும் ஜெயம்ரவி! கமலுக்கு ஒன்னு! முத்தையாவுக்கு ஒன்னு! அடுத்தடுத்து பிக்ஸ்டு

UDHAYA KUMAR June 02, 2022 & 18:12 [IST]
jayam ravi upcoming movie 2022 ஹரியுடன் இணையும் ஜெயம்ரவி! கமலுக்கு ஒன்னு! முத்தையாவுக்கு ஒன்னு! அடுத்தடுத்து பிக்ஸ்டுRepresentative Image.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பூமி. இது கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி  எதிர்மறை விமர்சனங்களை அதிகம் பெற்றது, வசூல் ரீதியாகவும் சொல்லிக்கொள்ளும் அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக வந்த படங்களில் வெற்றி பெற்ற படம் என்றால் அது 2019ம் ஆண்டு வந்த கோமாளி மட்டும்தான். அதன்பிறகு 3 ஆண்டுகளாக வெற்றிக்காக போராடி வருகிறார் ரவி. 

பூலோகம் பட இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனின் அகிலன் திரைப்படத்தில் கப்பலில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி, அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடன் ப்ரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வருகிற செப்டம்பர் 16ம் தேதி திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளது படக்குழு.  மிகத் தீவிரமாக இந்த படத்தை செதுக்கி வரும் இயக்குநர், இந்த படத்தில் மீண்டும் ஜெயம்ரவி மார்க்கெட்டை பிடிக்கவேண்டும் எனும் நோக்கில் தீயாக உழைத்து வருகிறார். 

ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம்ரவியுடன், விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். அதில் ஹரியுடன் ஒரு ஆக்ஷன் திரைப்படமும், கொம்பன் முத்தையா இயக்கத்தில் ஒரு படமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படமும் அடக்கம். ஏற்கனவே எஸ்எம்எஸ் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கதையும் கேட்டு வைத்துள்ளார் ரவி.  முன்னதாக அஹமத் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது இயக்கத்தில் ஜனகனமன நடித்து முடித்துள்ளார். 

இத்தனை படங்களில் அகிலன், பொன்னியின் செல்வன் தவிர்த்த எந்தெந்த படங்கள் எப்போது வெளியாகும் என  ஜெயம் ரவிக்கே தெரியாது. விரைவில் அனைத்து பட அப்டேட்களையும் டிரைலர், பர்ஸ்ட் சிங்கிள், பட ரிலீஸ் அப்டேட் என அனைத்தையும் நம் SEARCH AROUND WEB இணைய தளத்தில் தெரிந்துகொள்வோம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்