Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆல்-இன்-ஒன் லெனோவாவின் புதிய டூயல் ஸ்கிரீன் லேப்டாப்.. | Lenovo Dual Screen Laptop

Nandhinipriya Ganeshan Updated:
ஆல்-இன்-ஒன் லெனோவாவின் புதிய டூயல் ஸ்கிரீன் லேப்டாப்.. | Lenovo Dual Screen LaptopRepresentative Image.

லெனோவானின் யோகா புக் 9ஐ என்பது டூயல் டிஸ்ப்ளேயுடன் மடிக்கக்கூடிய விண்டோஸ் 11 லேப்டாப் ஆகும். கோர் i7 செயலி மூலம் இயக்கப்படும் இந்த தனித்துவமான லேப்டாப்பின் மேல் திரை 2.8கே OLED 13.3-இன்ச் அளவும், கீழே உள்ள மற்றொரு திரை 13.3-இன்ச் அளவும் கொண்டுள்ளது. இது மைக்ரோசாப்டின் லேப்டாப்களை காட்டிலும் முற்றிலும் வேறுப்பட்டவை. அதாவது, அங்கு நீங்கள் தனித்தனியாக பாகங்கள் வாங்க வேண்டும்.

ஆனால், இந்த லேப்டாப்பில் விசைப்பலகை, கிக்ஸ்டாண்ட் மற்றும் ஸ்டைலஸ் ஆகியவை கொடுக்கப்பட்டாலும், அதை திரையிலும் படுத்திக் கொள்ளலாம். விசைப்பலகை பயன்படுத்த வேண்டுமென்றால் திரையிலேயே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு திரைகளிலும் வேறுபட்ட பணிகளை செய்துக் கொள்ள முடியும். Lenovo Yoga Book 9i லேப்டாப் 1TB HDD சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது. 

ஆல்-இன்-ஒன் லெனோவாவின் புதிய டூயல் ஸ்கிரீன் லேப்டாப்.. | Lenovo Dual Screen LaptopRepresentative Image

எனவே, ஸ்டோரேஜ் பற்றிய கவலையும் வேண்டாம். கிராபிக்ஸ் Intel Iris Xe மூலம் இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் புளூடூத், மூன்று USB-C Thunderbolt 4 போர்ட்கள், WiFi 6E ஆகியவற்றுடன் வருகிறது. வீடியோ அழைப்பிற்காக, முழு-HD IR வெப்கேம் மற்றும் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது 80Wh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, இது 10 மணிநேர தொடர் பயன்பட்டிற்கு ஏதுவாக இருக்கும்.

இத்தனை வசதி இருக்கின்றது என்றால், விலையும் அதற்கு தகுந்தாற்போல தானே இருக்கும். ஆம், யோகா புக் 9ஐ லேப்டாப்பின் ஆரம்ப விலை $2,099.99 (தோராயமாக ரூ. 1,75,000) ஆகும். 

லெனோவா யோகா புக் 9ஐ விவரக்குறிப்புகள்:

பிராண்ட் - லெனோவா

மாடல் - யோகா புக் 9i

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - விண்டோஸ் 11

பேட்டரி கெப்பாசிட்டி - 80

முதல் டிஸ்ப்ளே அளவு

புதுப்பிப்பு விகிதம்

இரண்டாவது டிஸ்ப்ளே அளவு

புதுப்பிப்பு விகிதம்

ப்ராசஸர் - இன்டெல் கோர் i7 13வது ஜெனரல்

ரேம் - 16 ஜிபி

கிராபிக்ஸ் செயலி    - இன்டெல் ஐரிஸ் Xe

ஸ்டோரேஜ் - 1TB


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்