Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

LG OLED Rollable TV Price: ரூ. 75,00,000/-க்கு இந்த ஸ்மார்ட் டிவி வாங்குறதுக்கு...நாம வேற ஏதாவது பண்ணிட்டு போய்டலாம்! இதுல என்ன இருக்கு?

Priyanka Hochumin June 21, 2022 & 16:00 [IST]
LG OLED Rollable TV Price: ரூ. 75,00,000/-க்கு இந்த ஸ்மார்ட் டிவி வாங்குறதுக்கு...நாம வேற ஏதாவது பண்ணிட்டு போய்டலாம்! இதுல என்ன இருக்கு?Representative Image.

LG OLED Rollable TV Price: டிவி கேள்வி போட்டிருக்கோம், அது என்ன ரோலபிள் டிவி வாங்க பார்ப்போம். இதுல என்ன ஸ்பெஷலா இருக்கும் அப்புறம் விலை என்ன என்று தெரிந்து கொள்ள சற்று திடமாக இருந்து படியுங்கள்.

தற்போது நடுத்தர மக்களும் ஸ்மார்ட் டிவி உபயோகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தான் எல்ஜி போன்ற பெரிய நிறுவனங்களின் யுத்தி. மிடில் கிளாஸ் முதல் பணக்காரன் வரை யாருக்கு எந்த மாதிரியான டிவி உருவாக்கலாம் என்று தெளிவாக தயாரிக்கின்றனர். சரி அப்ப இந்த டிவி யாருக்கு பொருந்தும் என்று கேட்டால், நீங்க நினைத்தது சரி தான். இது முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கான டிவி மட்டுமே.

எதற்கு இப்படி ஒரு டிவி

கடந்த இரண்டு ஆடுகளாக கொரோனா தாக்கத்தால் மக்கள் அதிகமாக பொது இடங்களுக்கு செல்ல முடியவில்லை. அதனால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்க முடியவில்லை. சரி அப்ப வீட்டிலையே படம் பார்க்கும் அனுபவத்தை வழங்கும் டிவி ஒன்றை உருவாக்கினால் என்ன என்று பல நிறுவனங்கள் முயற்சி செய்தனர். அதற்கான ஆதாயமாக இந்த புது ரோலபிள் டிவி உருவாக்கப்பட்டது. இது குறிப்பிட்ட கடைகளில் தான் கிடைக்கும். இப்படிப்பட்ட கிளாஸி டிவி இந்தியாவில் இப்பொழுது கிடைக்கிறது. நீங்க வாங்க விரும்பினால், மும்பையில் உள்ள க்ரோமோ ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சிறிது காலத்தில் உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Oppo Reno 8 Pro Launch Date in India: இந்திய வெர்சனில் இந்த அம்சங்கள் இருக்குமா...விலை நிர்ணயம் எவ்ளோ தெரியுமா?


என்ன ஸ்பெஷல் இந்த டிவில

பொதுவாக ஸ்மார்ட் டிவி, ஒன்று சுவரில் மாட்டும் அல்லது ஸ்டாண்டில் வைக்கும் அம்சத்துடன் வரும். இந்த ஸ்மார்ட் டிவி ஒரு பாக்ஸ் உடன் வருகிறது. நீங்கள் டிவி பார்க்காத சமயத்தில் இதில் இருக்கும் ரோலபிள் அம்சத்தை உபயோகித்தால், டிவியின் டிஸ்ப்ளே சுருண்டு கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸ்-க்குள் சென்றுவிடும். பின்பு டிவி பார்க்கும் பொழுது மீண்டு ரோல் ஆகி அந்த பாக்ஸ்-க்குள் இருந்து வெளிவரும். இந்த ஒரு அம்சம் கொண்ட டிவி இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.

இதில் இருக்கும் சிறப்பம்சம்

இந்த அதிநவீன ஸ்மார்ட் டிவி லிக்விட் ஸ்மூத் ஆதரவு கொண்ட 65 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதில் செல்ஃப் லைட்டனிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி நிறுவனத்தின் α9 Gen 4 AI செயலி மூலம் இந்த ரோலபிள் ஸ்மார்ட் டிவி இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட் டிவி இது தான் என்று கூறப்படுகிறது. இப்பேர் பட்ட டிவிக்கு சவுண்ட் எப்படி இருக்கும், அதே போல் டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் ஒலி அனுபவத்தை வழங்குகிறது. இதற்கான ஆதரவை வழங்க டால்பி விஷன் ஐக்யூ பொருத்தப்பட்டுள்ளது. இதில் நாம் செயற்கையாக கேம் கூட விளையாடலாம், அதற்கான அனுபவத்தை வழங்க K 120fps மற்றும் G-Sync ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர இந்த ஸ்மார்ட் டிவியில் வேற என்ன புதுசா இருக்குன்னு கேட்டா? எதுவும் இல்லை. மற்ற எல்லா ஸ்மார்ட் டிவியில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளது. நீங்கள் அவளாக எதிர்பார்த்து இருக்கும் இணைப்பு விவரங்கள் இதோ - HDMI 2.1, 4K தெளிவுத்திறனுடன் 120Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, டால்பி விஷன், அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு மற்றும் Dolby Atmos ஆடியோ ஆகிய முதன்மை மற்றும் உயர்தர அம்சங்கள் இந்த ரோலபிள் டிவியில் இடம்பெற்றுள்ளது.


Samsung Galaxy S21 FE Price in India: புது வேரியண்டாக உருமாறும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன்! விலை முந்தைய வேரியண்டை விட பாதி தான்!


விலை தெரிஞ்சா மயங்கிடுவீங்க

இவ்ளோ தான் இருக்கு அப்ப இந்த LG Rollable OLED TV இன் விலை என்ன தெரியுமா? ரூ. 75,00,000/-மாம். இவ்ளோ நேரம் பார்த்த வரைக்கும் எதுவும் தெரியல ஆனால் விலைய பார்த்த உடனே இந்நேரம் குப்புனு வேர்த்திருக்குமே. அதான் முன்னாடியே சொன்ன மாறி வெறும் ஆடம்பரத்திற்கான உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி இது. இவ்ளோ விலை குடுத்து நாம ஏன் வாங்க போறோம். அதுக்கு பதிலா இந்த காச வச்சி வீடு, கார் அல்லது லோன் அடைச்சிட்டு போய்டலாம் போங்க.

LG oled rollable tv price, lg rollable oled tv price,lg rolling tv price, lg rollable tv size, lg rollable tv price amazon, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்