Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

New Update on Instagram: இன்ஸ்டாகிராமின் வேற லெவல் அப்டேட்...!!

Nandhinipriya Ganeshan June 04, 2022 & 15:50 [IST]
New Update on Instagram: இன்ஸ்டாகிராமின் வேற லெவல் அப்டேட்...!!Representative Image.

New Update on Instagram: உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இன்ஸ்டகிராம் பயனர்களை கவர பல சூப்பரான அப்டேட்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில், மிகவும் பிரபலமான TikTok என்ற ஷாட் வீடியோ தளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மு ன்பு தடைசெய்யப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் தனது ஷாட் வீடியோ தளத்தை அறிமுகப்படுத்தியது. 

இன்ஸ்டா ரீல்ஸ்:

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் முன்பெல்லாம் 60 வினாடிகளுக்கு மட்டுமே ரீல்ஸ் வீடியோக்களை அனுமதித்திருந்தது. தற்போது, இன்ஸ்டா ரீல்ஸின் பயன்பாடு அதிகரித்து வருவதன் மூலம், பயனர்களுக்கு ஒரு சூப்பரான அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இனி 90 வினாடிகளுக்கு ரீல் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு, இன்டாகிராம் அதன் ஷாட் வீடியோ தளமான Reels க்கான கால அளவை நீட்டிப்பது இதுவே முதல் முறை. இன்ஸ்டாவின் ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு அப்டேட், வீடியோ கிரியேட்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அம்சங்கள்:

அதுமட்டுமல்லாமல், இந்த அப்டேட்டில், நியூ டெம்பிளேட், இன்ட்ராக்டிவ்  ஸ்டிக்கர்ஸ், நியூ சவுண்ட் எவெக்ட் மற்றும் தனது சொந்த ஆடியோவை டவுன்லோடு செய்யும் வசதி என பல அம்சங்களையும் Instagram சேர்த்துள்ளது. இந்த புதிய அம்சங்களுடன் கூடிய அசத்தலான அப்டேட்டை iOS மற்றும் Android பயனர்கள் தங்களது ஆப்பை அப்டேட் செய்வதன் மூலம் பெற முடியும். 

மீண்டும் டிக்டாக்:

டிக்டாக்கை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர, கூட்டாளர்களுடன் இணைந்து பைட் டன்ஸ் பணிபுரிவதாக வெளியான செய்திகளின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம் இந்த அம்சங்களை சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இன்ஸ்டா ரீல்ஸ் முன்பை விட அதிக பயனர்களை கவர்ந்திழுக்கவும் இன்ஸ்டாகிராம் இதை செய்துள்ளது. ஆனால் டிக்டாக் மீண்டும் அறிமுகப்படுத்துவதை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்ப ஆதார் யூஸ் பண்ணலாமா இல்லையா தெளிவா சொல்லுங்க! முக்கிய ஆதார் கார்டு தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்