Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Twitter Circle Update 2022: ட்விட்டர் புது அப்டேட்...150 பேர் வச்சு சர்க்கிள் பார்ம்...பண்ணி ட்வீட் போடலாம்!

Priyanka Hochumin May 30, 2022 & 21:15 [IST]
Twitter Circle Update 2022: ட்விட்டர் புது அப்டேட்...150 பேர் வச்சு சர்க்கிள் பார்ம்...பண்ணி ட்வீட் போடலாம்!Representative Image.

Twitter Circle Update 2022: ட்விட்டர் அதன் பயனர்களுக்கு "சர்க்கிள்" என்னும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் என்ன புதிதாக இருக்கிறது, இதனுடைய அம்சங்கள் என்ன? என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மக்கள் தங்கள் முக்கிய நிகழ்வுகளை வெளிப்படுத்த நிறைய சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகின்றனர். அதில் ட்விட்டர் ஆப் ஒரு விதமான அனுபவத்தை அளிக்கிறது. எனவே, அதிக மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். மக்களின் குறைகளை நீக்க அடிக்கடி புது புது அப்டேட்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்ப ஆதார் யூஸ் பண்ணலாமா இல்லையா தெளிவா சொல்லுங்க! முக்கிய ஆதார் கார்டு தகவல்!

புது அப்டேட்

அந்த வகையில் தற்போது வெளியிட்ட தகவல் படி, ட்விட்டர் அதன் பயனர்களுக்கு "சர்க்கிள்" என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் பயனர் சுமார் 150 நபர்களை அவரின் வட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். மேலும் அவர் தெரிவிக்க விரும்பும் தகவலை அந்த சர்க்கிளில் பதிவிடலாம். அந்த வட்டத்தில் பயனரின் குடும்பம், பிரண்ட்ஸ் மற்றும் வேலை செய்யும் நிறுவனம் உட்பட அவற்றுள் இடம் பெறலாம். இது வேகமாக தகவலை பகிர வழிவகுக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில பேருக்கு இந்த அப்டேட் இன்னும் வராமல் இருக்கலாம். அவர்களுக்கு ட்விட்டர் ஒரு கட்டமாக வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கிட்டத்தட்ட வாட்ஸ்அப் குரூப் போல தான், என்ன இதில் 150 பேரை ஒன்றாக இணைக்க முடிகிறது. மேலும் இந்த குழுவில் இருப்பவர்கள் மட்டுமே ஒருவரின் பதிவுக்கு பதிலளிக்கவோ தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவோ முடியும்.

Twitter Circle அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த புதிதாய் அப்டேட் நமக்கு வந்துவிட்டதா? அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற கேள்விகளுக்கான விளக்கம் இதோ.

முதலில் நீங்கள் உங்களின் ட்விட்டர் அக்கௌன்டை லாகின் செய்யவும். பின்பு உள்நுழைந்து ட்வீட் பேனலுக்குச் (Compose Tweet panel) செல்லவும். இங்கு ஆடியன்ஸ் பட்டனைத் தட்டும் பொழுது புதிய சர்க்கிள் ஆப்ஷனை நீங்க பார்ப்பீர்கள். அதில் இருக்கும் எடிட் பட்டனைத் தட்டி நீங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம், அகற்றலாம். இருப்பினும் ஒருவர் அந்த சர்க்கிளுக்குள் சேர்க்கப்பட்டாலோ அல்லது அகற்றப்பட்டாலோ அவர்களுக்கு எந்த நோட்டிபிகேஷனும் வராது.

இப்பொழுது ஒருவரின் சர்க்கிளில் ட்வீட் பதிவிட்டால், அவரும் அந்த சர்க்கிளில் இருப்பவர்கள் மட்டுமே அந்த ட்வீட்டை பார்க்க முடியும் என்று பச்சை நிற அறிவிப்பைப் பார்ப்பார்கள். உங்களுக்கு இந்த அப்டேட் கிடைத்திருந்தால் நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

Twitter Circle Update 2022, twitter circle update today tamil, twitter new update, twitter new update 2022, twitter update today, twitter update circle icon,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்