Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாடர்ன் சாஃப்ட்வேர் & சிறந்த பேட்டரி வசதியுடன் Nokia 130, Nokia 150 மீண்டும் அறிமுகம்! | Nokia 130 vs Nokia 150 (2023)

Nandhinipriya Ganeshan Updated:
மாடர்ன் சாஃப்ட்வேர் & சிறந்த பேட்டரி வசதியுடன் Nokia 130, Nokia 150 மீண்டும் அறிமுகம்! | Nokia 130 vs Nokia 150 (2023)Representative Image.

அந்த காலத்தில் நோக்கியா ஃபோன் என்றாலே தனி சிறப்புண்டு. அதிலும் பாம்பு கேம் விளையாடிய நாட்களை எல்லாம் நம்மால் மறக்கவே முடியாது. ஆனால், தற்போது அட்டகாசமான அம்சங்களுடன் இருக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தான் எல்லோருடைய கைகளிலும் இருக்கிறது. இந்த சமயத்தில் தான் நோக்கியா நிறுவனம் சத்தமில்லாமல் Nokia 130 மற்றும் Nokia 150 என்ற இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஃபோன்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், அவற்றின் மென்பொருள் (Software) மற்றும் அம்சங்கள் மட்டும் நவீனமாக்கப்பட்டுள்ளன. அப்படி என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி பார்க்கலாம்.

மாடர்ன் சாஃப்ட்வேர் & சிறந்த பேட்டரி வசதியுடன் Nokia 130, Nokia 150 மீண்டும் அறிமுகம்! | Nokia 130 vs Nokia 150 (2023)Representative Image

நோக்கியா 150 அம்சங்கள்:

2016 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் நோக்கியா 150 அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், நிறுவனம் 2020 இல் மற்றொரு நோக்கியா 150 ஐ வெளியிட்டது. அதன்பிறகு இந்த மாடல் தான் அனைத்து விதமான அடிப்படை அம்சங்களுடனும் கொண்டுவரப்பட்டுள்ளது. கருப்பு, சியான் மற்றும் சிவப்பு என்ற மூன்று வகையான வண்ணத்தேர்வுகளில் கிடைக்கக்கூடிய இந்த நோக்கியா 150 மாடல் 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. 

1450 mAh நீக்கக்கூடிய பேட்டரியுடன் வருகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ப்ரீ-இன்ஸ்டால்டு எஃப்எம் ரேடியோவும் உள்ளது. சுவாரஸ்மாக, பின்புறத்தில் ஸ்பீக்கர், 0.3எம்பி விஜிஏ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உள்ளது. கூடுதலாக, 32GB வரையிலான MicroSD கார்டு ஆதரவும் உள்ளது. இதன் மூலம் உங்களுடைய அனைத்து தரவையும் போனில் சேமித்து கொள்ள முடியும்.

Nokia 150 (2023) -இன் மற்ற சிறப்பம்சங்கள், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், MP3 பிளேயர், வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் GSM நெட்வொர்க் இணைப்புடன் (2G) ஒற்றை மினி-சிம் ஆதரவு ஆகியவை அடங்கும். சாதனம் நானோ அமைப்புடன் பாலிகார்பனேட்டைக் கொண்டுள்ளது; அதுமட்டுமல்லாமல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. 106.3 கிராம் எடையும் 130.95 x 50.6 x 15.15 மிமீ பரிமாணமும் கொண்டுள்ளது.

மாடர்ன் சாஃப்ட்வேர் & சிறந்த பேட்டரி வசதியுடன் Nokia 130, Nokia 150 மீண்டும் அறிமுகம்! | Nokia 130 vs Nokia 150 (2023)Representative Image

நோக்கியா 130 அம்சங்கள்:

Nokia 130, அதே பெயரில் மூன்றாவது மாடல் (முந்தைய இரண்டு மாடல்களும் 2014 மற்றும் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டன) ஆகும். மேலும், 1450 mAh நீக்கக்கூடிய பேட்டரியுடன் 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நோக்கியா 150 மாடலின் பெரும்பாலான அம்சங்களை கொண்டுள்ள நோக்கியா 130ல் கேமரா இல்லாதது மட்டுமே குறிப்பிடத்தக்க வித்தியாசம். 

இருப்பினும், நோக்கியா ஒரு எல்இடி ஃபிளாஷ் ஒரு டார்ச்சாக சேவை செய்யும் விதமாக சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான வடிவமைப்பு மற்றும் சற்று மெல்லியதாகவும் (14 மிமீ) உள்ள இந்த நோக்கியா 130 ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீட்டை கொண்டுள்ளது. 4எம்பி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4எம்பி ரேம் வசதியுடன் வந்துள்ள இந்த மாடல் டார்க் ப்ளூ, லைட் கோல்ட் மற்றும் பர்பிள் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இரண்டு ஃபோன்களிலுமே பாம்பு கேம்மின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்