Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

50MP ரியர் கேமராவுடன்...களமிறங்கியுள்ளது Samsung Galaxy A23 5G...வாங்குனா இப்படி வாங்கணும்

Priyanka Hochumin Updated:
50MP ரியர் கேமராவுடன்...களமிறங்கியுள்ளது Samsung Galaxy A23 5G...வாங்குனா இப்படி வாங்கணும்Representative Image.

Samsung Galaxy A23 5G ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது உலகளவில் ஆகஸ்ட் மாதம் வெளியான Samsung Galaxy A23 5G-ஐ விட சற்று வேறுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜப்பானில் வெளிவந்த இந்த மாடல் ஒரே ஒரு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டும் கிடைக்கும். இது பற்றிய மற்ற விவரங்கள் இதோ.

50MP ரியர் கேமராவுடன்...களமிறங்கியுள்ளது Samsung Galaxy A23 5G...வாங்குனா இப்படி வாங்கணும்Representative Image

விலை இவ்ளோ தானா?

ஜப்பானில் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வெளியான Samsung Galaxy A23 5Gயின் விலை JPY 31,680 (தோராயமாக ரூ. 18,200) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பிளாக், ரெட் மற்றும் வைட் ஆகிய கலர் ஆப்ஷனில் கிடைக்கும். ஒருவேளை வாங்க விரும்பினால் au.com, J:Com, Rakuten Mobile மற்றும் ஜப்பானில் உள்ள பிற சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்கலாம்.

50MP ரியர் கேமராவுடன்...களமிறங்கியுள்ளது Samsung Galaxy A23 5G...வாங்குனா இப்படி வாங்கணும்Representative Image

இப்படி பட்ட அம்சங்களா?

வெளியான புது Samsung Galaxy A23 5G ஆனது Android 12 இல் இயங்குகிறது. இது 5.8-inch HD+ (720x1,560 pixels) TFT டிஸ்ப்ளே 16 மில்லியன் வண்ணங்களைக் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய வெர்சன் 6.6 இன்ச் Infinity-V டிஸ்ப்ளே முழு-எச்டி+ தெளிவுத்திறனுடன் இருந்தது. மேலும் இந்த மாடல் 4GB ரேம் உடன் இணைந்து 2.2GHz ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இது MediaTek Dimensity 700 SoCக்கான குறிப்பாக இருக்கலாம்.

50MP ரியர் கேமராவுடன்...களமிறங்கியுள்ளது Samsung Galaxy A23 5G...வாங்குனா இப்படி வாங்கணும்Representative Image

அட்டகாசமான கேமரா...

இந்த ஸ்மார்ட்போனில் போட்டோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, பின்புறத்தில் f/1.8 லென்ஸுடன் கூடிய ஒற்றை 50-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மேலும் செல்பீ, வீடியோ சேட் முறைக்கு முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடலில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

50MP ரியர் கேமராவுடன்...களமிறங்கியுள்ளது Samsung Galaxy A23 5G...வாங்குனா இப்படி வாங்கணும்Representative Image

உடனே வாங்கணும் போலையே!

புது Samsung Galaxy A23 5G 5G ஆனது மைக்ரோ SD கார்டு வழியாக (1TB வரை) விரிவாக்கக்கூடிய 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைப் பெற்றுள்ளது. கூடுதலாக, இருக்கும் இணைப்பு விருப்பங்கள் - 5G, 4G/LTE, Bluetooth v5.2, NFC, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். மேலும் இது 4,000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இருப்பினும் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இது 150×71×9.0mm measures மற்றும் 168 கிராம் எடையுடையது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்