Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாம்சங் கேலக்ஸி A54 vs M54.. எது பெஸ்ட்..?

Gowthami Subramani Updated:
சாம்சங் கேலக்ஸி A54 vs M54.. எது பெஸ்ட்..?Representative Image.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ரிலீஸ் செய்த மொபைல் எளிதாக வாடிக்கையாளர்களைக் கவர்வதுடன், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. சாம்சங் கேலக்ஸி A54 vs M54 வகையில், எந்த வகை மொபைலை வாங்கலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். இந்தப் பதிவில் இந்த இரண்டு மாடல்களின் அம்சங்கள் குறித்த விவரங்களைக் காணலாம்.

சாம்சங் கேலக்ஸி A54 vs M54.. எது பெஸ்ட்..?Representative Image

இந்த இரண்டு மாடல் மொபைல்களும் பல்வேறு அம்சங்களில் ஒற்றுமையைக் கொண்டிருப்பினும், இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. சாம்சங் A54 மற்றும் M54 ஆகிய இரண்டு போன்களுமே ஒரே சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால், கேலக்ஸி ஏ சீரிஸ் ஆனது சாம்சங்கின் பிரீமியம் மிட்-ரேஞ்ச் வரிசை ஆகும்.

இந்த இரண்டு மொபைல்களின் டிசைன் மற்றும் டிஸ்பிளேயைப் பொறுத்தவரை Galaxy A54 ஆனது முழு ஹெச்டி பிளஸ் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆனது, 6.4 இன்ச் சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. Galaxy M54 சீரியஸ் ஆனது முழு ஹெச்டி பிளஸ் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆனது 6.7-இன்ச் சூப்பர் அமோல்டு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A54 vs M54.. எது பெஸ்ட்..?Representative Image

Samsung Galaxy A54 மற்றும் M54 ஆனது, செயல்திறன் அடிப்படையில், ஸ்னாப்டிராகன் 778G மற்றும் Mediatek Dimensity 1080 SoC போன்றவற்றுடன் ஒப்பிடத்தக்கது. மேலும், Samsung Galaxy A54 மொபைல் ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் Samsung Galaxy M54 ஆனது 6,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. மேலும், இந்த இரண்டு மொபைல்களுமே 25 வாட் சார்ஜிங் உடன் காணப்படுகிறது. இந்த இரண்டு சீரிஸ் மொபைல்களும் ஒரே மாதிரியான முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது.

A54 மொபைல் ஆனது 12MP Ultra-wide Camera மற்றும் 5MP Macro Camera-வையும், M54 மொபைல் ஆனது 8MP Ultra-wide Camera மற்றும் 2MP Macro Camera-வையும் கொண்டுள்ளது. இரண்டு மொபைல்களும் முன்பக்க கேமரா அமைப்பாக 32MP சென்சாரைக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்