Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WhatsApp Update 2022: வாட்ஸ்அப்பில் புது அப்டேட்...இத்தனை பேர சேர்த்து...நாம என்ன பண்ண போறோம்!

Priyanka Hochumin October 11, 2022 & 11:15 [IST]
WhatsApp Update 2022: வாட்ஸ்அப்பில் புது அப்டேட்...இத்தனை பேர சேர்த்து...நாம என்ன பண்ண போறோம்!Representative Image.

WhatsApp Update 2022: வாட்ஸ்அப் வெளியிட்ட சூப்பர் அப்டேட், இனி ஒரு குரூப் இல் 1024 பேரை ஈஸியா சேர்க்கலாம். அது பற்றிய முழு விவரங்கள் இதோ இந்த பதிவில்.

நமக்கு தெரிந்தது போல் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப். உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இந்த ஆப் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அப்படியாக இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் தான் அந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் வாட்ஸ்அப்பின் செயல்பாடுகளை கண்காணிக்கும் WABetaInfo இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வெளியிட அப்டேட்டில் 512 உறுப்பினர்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்கலாம் என்று அறிமுகப்படுத்தினர். அதனை இப்போது அதிகரித்து சுமார் 1024 நபர்களை ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் நம்மால் இனைக்க முடியும் இந்த அப்டேட் மூலம். இத்துடன் சேர்ந்து Pending Participants என்னும் மற்றொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குரூப்பின் அட்மின் அந்த எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கவும், மேலும் அவர்களை அட்மின் அங்கீகரிக்கவும் வழிவகுக்கிறது.

இங்கே குறிப்பிட்ட அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது டெஸ்டிங்கிற்காக ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களிடம் இந்த அம்சம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள புது குரூப் உருவாக்கியோ அல்லது ஒரு குரூப்பில் கூடுதலாக நபர்களை சேர்த்தோ பாருங்கள்.


Representative Image. Most Read: தமிழ்நாட்டில் பள்ளி துவங்கிய நம்ம தல தோனி...! எங்கே தெரியுமா..?


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்