Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை. 

Bala May 16, 2022 & 11:05 [IST]
 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை. Representative Image.

இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை:-

தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

விரிவாக படிக்க:- புத்தகங்களுக்கு பதில் பட்டாக்கத்தி....சென்னையில் மீண்டும் ரூட்டு தல...!

ரெட் அலார்ட்:-

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு:-

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்