Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,014.23
8.29sensex(0.01%)
நிஃப்டி22,534.20
32.20sensex(0.14%)
USD
81.57

வேளாண் தொழில்நுட்பங்கள்

மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி? | How to Take Care of Plants in Rainy Season in Tamil

Nandhinipriya Ganeshan December 13, 2022

நம் அனைவருக்குமே வீட்டைச் சுற்றி அழகழகான பூ செடிகள், காய்கறிகள் செடிகள், மரங்களை வளர்ப்பதற்கு ரொம்ப பிடிக்கும். பொதுவாக, எல்லா செடிகளுக்குமே தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால், அளவுக்கும் மீறி தண்ணீர் ஊற்றினால் அந்த செடியின் வேர் அழுகிவிடும். இப்படி செடிகளை எப்படி வளர்ப்பது என்று கூட தெரிந்து வைத்திருப்போம். ஆனால், பருவநிலை எல்லாநேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா? பெரும்பாலும் செடிகள் எல்லா பருவத்திலும் வளரக்கூடியவையாக இருந்தாலும் ஒரு சில செடிகளை மழைக்காலத்தில் பராமரிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், மழைக்காலத்தில் உங்க செடிகளை எப்படி பராமரிப்பது என்பது பற்றி பார்க்கலாம். 

How to: SBI விவசாய தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Sbi Agri Gold Loan Scheme?

Nandhinipriya Ganeshan December 13, 2022

விவசாயிகளின் தேவைகளை கவனத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கி இரண்டு வகையான தங்க நகைக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 1. பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன், 2. பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஏராளமான நன்மைகளை பெற முடியும். பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன் திட்டத்தில் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 7% வட்டி விதிக்கப்படுகிறது. அடுத்து, ரூ. 3 லட்சத்திற்கு மேல் வாங்கும் விவசாய கடனிற்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூல் செய்யப்படும். அதுவே, பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன் திட்டத்தில் வாங்கும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூலிக்கப்படும்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…

Gowthami Subramani December 05, 2022

இயற்கையான முறையில் நம் மாடித் தோட்டத்திலேயே, ப்ரோக்கோலியை வீட்டில் நன்றாக வளர்க்க முடியும். மாடித் தோட்டத்தில் ப்ரோக்கோலி வளர்க்கும் முறைகளையும், அதற்கான சில குறிப்புகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம். உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களால் விரும்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் சத்தான காய்கறி ப்ரோக்கோலி ஆகும். இது சாலட்களில் பொதுவான மூலப் பொருளாகும். இதனை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். முட்டைகோஸ், காலிஃபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறியாகவும், நார்ச்சத்து மிகுந்ததாகவும் இருப்பது ப்ரோக்கோலி ஆகும். இதில் உள்ள ஊட்டச்சத்து சக்தியை வைத்து இதனை சூப்பர் ஃபுட் என்றே கூறலாம்.

எந்த வயசுலயும், எந்த பிரச்சனையும் வராம இருக்க இத சாப்பிடுங்க…

Gowthami Subramani November 28, 2022

உடலில் எந்த பிரச்சனைகளும் வராமல் இருக்க, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு காரத்தைக் கூட தினந்தோறும் எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதிலும் குறிப்பாக கீரை வகைகளை நாம் பயன்படுத்தி வந்தால் நமக்கு எந்த நோய்களும் வராது. நம் உணவில் கீரையைச் சேர்ந்து உண்பதால், எந்தவித பிரச்சனைகளும் நம்மை நெருங்காது. பொதுவாக அனைத்து வகைக் கீரைகளிலும் ஒரு தனிப்பண்பு உள்ளது. இதன் மூலம், நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?

Gowthami Subramani November 22, 2022

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதும், ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் வெற்றிலை ஆகும். இதனை எளிமையான முறையில் நம் வீட்டிலேயே வளர்க்கலாம். இது குறித்து இந்தப் பதிவில் காணலாம். வெற்றிலையை பிரித்தால், வெற்று இலை என பொருள்படும். ஆனால், பெயரில் உள்ளது போல இது வெறும் இலை அல்ல. வேறுபட்ட இலை என்றே கூறலாம். உண்மையில் இது ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் வகையில் அமையக்கூடிய மருந்து ஆகும். பொதுவாக, இது ஜீரண சக்திக்காகப் பயன்படுத்துவர்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?

Gowthami Subramani October 06, 2022

பொதுவாக, பழங்களின் உட்பகுதியில் விதைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ஸ்ட்ராபெர்ரி பழத்தில் விதைகள் வெளிப்புறத்தில் காணப்படும். இந்த விதைகளின் மூலம், ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கும் முறைகளைப் பற்றி இதில் காண்போம். முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து அதிலிருந்து விதைகளை தனியே எடுத்துக் கொள்ளலாம். பழத்தை தண்ணீரில் அலசி விதைகளை எளிதாகத் தனியே பிரிக்கலாம். இந்த விதைகள் தண்ணீரிலிருந்து தனியே பிரித்து எடுத்துக் கொள்ளலாம். பிறகு, இந்த தண்ணீரில் ஊறிப்போன விதைகளை டிஸ்யூ பேப்பரில் எடுத்துக் கொண்டு, விதைகளிலிருந்து தண்ணீரை முற்றிலும் அகற்றியவாறு எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!

Gowthami Subramani September 28, 2022

பொதுவாக, கேரட் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலேயே வளரும் எனக் கூறுவர். ஆனால், நம் வீட்டிலேயே கேரட் செடியை நன்றாக வளர்க்க முடியும். இதற்கு சரியான காலநிலை தெரிதல் அவசியமானது. இந்தப் பதிவில் கேரட் விதைப்பது முதல் அதனை அறுவடை செய்வது வரை உள்ள விவரங்களைப் பற்றி காண்போம். மேலும், இதனை எந்த காலநிலைகளில் வளர்க்க முடியும் என்பதைப் பற்றியும் காண்போம். கேரட் விதைகளை வைத்து கேரட் வளர்க்கும் முறையைப் பற்றி இதில் காணலாம். இந்த முறையில் கேரட் வளர்ப்புக்கு கேரட் விதைகள் தேவைப்படுகின்றன.

தினமும் சாப்பிட தண்டுக்கீரை… இந்த முறைகளைப் பின்பற்றுங்கள்.. 25 நாள்களில் சாகுபடி செய்யலாம்..!

Gowthami Subramani September 07, 2022

அன்றாட உணவில் நாம் முக்கியமாக உண்ணக் கூடிய மிகுந்த சத்தான உணவுப் பொருள்களில் கீரையும் அடங்கும். அறிவியல்ரீதிப் படி, ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் 300 கிராம் காய்கறிகளைக் கட்டாயம் உண்ணுதல் வேண்டும். இவ்வாறு சத்து மிக்க காய்கறிகளை நாம் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையைத் தரும். வீட்டில் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை வளர்க்க தொட்டி அல்லது குரோ பேக்-ஐப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு தண்டுக்கீரையை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

உங்க வீட்டிலும் வண்ணமயமான செவ்வந்தி பூக்கள்… … எப்படி வளர்க்கலாம்னு பாருங்க…!

Gowthami Subramani September 01, 2022

வீட்டிலேயே எளிமையாக வண்ண மயமான செவ்வந்தி செடியை வளர்க்கலாம். சிலர் செவ்வந்தி பூக்களைப் பொதுவாக அலங்காரத்திற்காக வீட்டில் வளர்த்துவர். இவற்றைப் பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளவும், கடவுளுக்கு மாலையாகக் கோர்த்துப் போடவும் இந்த செவ்வந்தி பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. செவ்வந்தி பூக்கள் வண்ணமயமான கலர்களில் கிடைக்கின்றன. அந்த வகையில் வீட்டில் செவ்வந்தி செடி வளர்த்துபவர்கள் எந்த நிற செவ்வந்தி செடி வேண்டுமோ, அந்த நிறத்தில் செடிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்டை செங்குத்தான வெட்டினால் மட்டுமே செடிக்கான வேர் உண்டாகும்.

வீட்டிலேயே எளிமையாக இஞ்சி வளர்க்கும் முறைகள்…! இஞ்சி முளைப்பது முதல் அறுவடை செய்தல் வரை…!

Gowthami Subramani August 30, 2022

வீட்டிலயே நறுமணமான இஞ்சியை வளர்ப்பதற்கு பெரும்பாலானோர் விரும்புவர். அது மட்டுமல்லாமல், மக்கள் இயற்கை விவசாயத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில், நிலம் வைத்திருப்பவர்கள் தோட்டமாக உருவாக்கி பல்வேறு காய்கறி செடிகளை வைப்பர். இந்த வசதி இல்லாதவர்கள், மாடித்தோட்டம் வைத்து அதன் மூலம், சில சமையலுக்கு உபயோகிக்கக் கூடிய உணவுப் பொருள்களை வளர்த்து பராமரிப்பர். இந்தப் பதிவில், வீட்டிலேயே எவ்வாறு எளிதாக இஞ்சி நடலாம் என்பது முதல் அதனை அறுவடை செய்தல் வரை பார்க்கலாம்.