Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?

Gowthami Subramani Updated:
How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?Representative Image.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதும், ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் வெற்றிலை ஆகும். இதனை எளிமையான முறையில் நம் வீட்டிலேயே வளர்க்கலாம். இது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?Representative Image

வெற்றிலையின் முக்கியத்துவம்

வெற்றிலையை பிரித்தால், வெற்று இலை என பொருள்படும். ஆனால், பெயரில் உள்ளது போல இது வெறும் இலை அல்ல. வேறுபட்ட இலை என்றே கூறலாம். உண்மையில் இது ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் வகையில் அமையக்கூடிய மருந்து ஆகும். பொதுவாக, இது ஜீரண சக்திக்காகப் பயன்படுத்துவர். அதன் படி, உணவு சாப்பிட்ட பிறகு, எந்த சிக்கலும் இன்றி, உணவு செரிமானம் சரிவர நிகழ வெற்றிலையை உண்ணலாம். உணவு செரிமானம் அடைய வெற்றிலையை இரசாயனம், பூச்சிக் கொல்லி இல்லாத வகையில் நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம்.

How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?Representative Image

வெற்றிலைச் செடிகள் வளர்க்கும் முறை

வெற்றிலைச் செடி வளர்ப்பதற்கு முதலில் உடைந்த பக்கெட்டுகள், தண்ணீர் கேன், இனிப்பு ட்ரேடுகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் அடிப்பகுதியில் 3 அல்லது 4 சிறு சிறு துளைகள் இட்டுக் கொள்ள வேண்டும்.

வீட்டருகில் கிடைக்கக் கூடிய செம்மண் அல்லது புல், செடி, கொடிகள் முளைத்திருக்கும் மண்ணப் பயன்படுத்தலாம். இவற்றில், ஏதேனும் ஒரு வகை மண் மற்றும் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரம் இவை இரண்டையும் சம அளவில் சேர்க்கவும்.

How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?Representative Image

இதனுடன், வீட்டருகில் கிடைக்கக் கூடிய காய்ந்த இலை தழைகளின் சருகுகள் ஒரு பங்கும், மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்புச் சக்கை ஒரு பங்கும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து நாம் எடுத்துக் கொண்ட டப்பா அல்லது தொட்டியில் முக்கால் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, எந்த பராமரிப்பும் இல்லாமல் இந்த வெற்றிலைக் காம்புகள் (கணுக்களுடன் உள்ள காம்புகள்) மண்ணில் பதியம் போடுவதன் மூலம் சில நாள்களில் வெற்றிலைக் கொடி தயாராகி விடும்.

வாரம் இரண்டு முறை நீர் ஊற்றி வெற்றிலைச் செடியை வளர்க்க வேண்டும்.

How To: வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை வளர்க்கலாம்.. எப்படி தெரியுமா..?Representative Image

வெற்றிலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள்

வெற்றிலையில் சாம்பல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

இதன் காரணமாக, இலைகள் பசுமையான நிறம் அடைவதுடன் பளபளப்பு தன்மையை இழந்து மஞ்சளாகி கீழ் நோக்கி தொங்கி விடும்.

மேலும், இதன் கணுப்பகுதியானது கருமை நிறமாக மாறி, அழுகி இருப்பதையும் காணலாம்.

இதனை தொழு உரம், மீன் அமிலம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பங்கொட்டைக் கரைசல், 3ஜி கரைசல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வாரம் ஒரு முறை அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்.

இதன் மூலம், வெற்றிலைச் செடியானது பூச்சி, நோய் தாக்குதல் இன்றி செழிப்பாக வளரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்