Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!

Gowthami Subramani September 28, 2022 & 16:38 [IST]
வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!Representative Image.

பொதுவாக, கேரட் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலேயே வளரும் எனக் கூறுவர். ஆனால், நம் வீட்டிலேயே கேரட் செடியை நன்றாக வளர்க்க முடியும். இதற்கு சரியான காலநிலை தெரிதல் அவசியமானது. இந்தப் பதிவில் கேரட் விதைப்பது முதல் அதனை அறுவடை செய்வது வரை உள்ள விவரங்களைப் பற்றி காண்போம். மேலும், இதனை எந்த காலநிலைகளில் வளர்க்க முடியும் என்பதைப் பற்றியும் காண்போம்.

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!Representative Image

விதைகளைப் பயன்படுத்தி கேரட் விதைக்கும் முறை

கேரட் விதைகளை வைத்து கேரட் வளர்க்கும் முறையைப் பற்றி இதில் காணலாம். இந்த முறையில் கேரட் வளர்ப்புக்கு கேரட் விதைகள் தேவைப்படுகின்றன. அதன் படி, விதைகளை வைத்து கேரட் வீட்டிலேயே கீழே கொடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி வளர்க்கலாம். பருவ மாற்றங்களின் காரணமாக, கேரட் அறுவடை செய்வதற்கு தாமதம் ஆகலாம். இதனால், கிலோவிற்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக, கேரட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிரமம் எதுவும் இல்லாமல் நம் வீட்டிலேயே எப்படி கேரட் வளர்க்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!Representative Image

கேரட் விதைப்பு மற்றும் அறுவடை செய்யும் முறை

கேரட்டின் விதைகள், ஓமம் அல்லது சீரகம் போன்று காணப்படும். இவ்வாறு, கேரட் விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, கோகோ பீட், செம்மண், மக்கி தொழுஉரம் கலந்த மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி, கோகோ பீட், செம்மண் மற்றும் மக்கி தொழு உரம் முறையே 40:30:30 என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மண்ணின் வழவழப்புத் தன்மைக்காக கோகோ பீட்டை சிறிது அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!Representative Image

கேரட்டை பெரிய நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், விதைகள் சிறியதாக இருப்பதால் அதனை மண்ணில் கலந்து தூவி விடுவார்கள். ஆனால், சிறிதளவு இடத்தில் குறைவாக விதைப்பவர்கள் மண்ணிலேயே விதைகளைப் போட்டு மூடி விடலாம்.

கேரட்டை விதைக்கும் போது சிறிதளவு மணல் உபயோகித்துக் கொள்ளலாம்.

கேரட் பொதுவாக நேராக வளரக் கூடியவை போல் வளர்க்க வேண்டும்.

10 நாள்களுக்குப் பிறகு செடி வளர்வதைக் காணலாம்.

பொதுவாக கேரட் குளிர் காலங்களில் வைப்பது நல்லது. கேரட் குளிர்காலத்தில் வேகமாகவும், அதிகமாகவும் வளரும்.

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறை முதல் அறுவடை செய்வது வரை..? முழு விவரங்களுடன்..!Representative Image

பின் சரியான பராமரிப்புடன், கிட்டத்தட்ட 2 முதல் 3 மாதத்திலேயே கேரட் வளர்வதைக் காணலாம்.

அதே போல, மண்ணிற்கு ஆற்றல் தேவைப்படுவதற்கு மண் புழு உரம் உள்ளிட்டவற்றைச் செலுத்தலாம். கேரட் செடி வளர வளர கொத்தமல்லி செடி போல இருக்கும்.

முக்கியமாக கேரட் வளர்க்கும் போது ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் சிறிது அதிக இடைவெளி இருக்குமாறு வைக்க வேண்டும்.

அதன் வேர்ப்பகுதியிலேயே நீங்கள் கேரட் செடி வளர்ந்திருப்பதைக் காணலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்