Nandhinipriya Ganeshan May 23, 2023
ஒவ்வொரு பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி தன்னுடைய சகோதரனுடனான பிணைப்பு என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தவை தான். எத்தனை முறை சண்டை போட்டாலும் அவன் என்னுடைய அண்ணன், தம்பி திமிராக சொல்லுக்கூடிய ஒரே சொந்தம். எனவே, இந்த அழகான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 24 ஆம் தேதி தேசிய சகோதரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பிறகு இது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா உறவுகளையும் போலவே இந்த உறவும் அழகானது தான்.
Nandhinipriya Ganeshan May 13, 2023
இவ்வுலகில் நமக்கு எத்தனையோ உறவுகள் கிடைத்தாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடுணையே இல்லை. வீட்டில் எல்லோரையும் அன்போடும், அக்கறையோடும் அரவணைப்பவள் நம்முடைய அம்மா தான். நாம் பிறப்பதற்கு முன்பாகவே நம்மை ரசித்தவள். இன்பம், துன்பம் என எதுவந்தாலும் நம் அருகில் நின்று அனைப்பவள். தன்னுடைய ஆசை, விருப்பு, வெறுப்பை மறந்து குடும்பத்தையே தன் கையில் தாங்கிக் கொண்டு ஓய்வே இல்லாமல் உழைக்கும் அன்புள்ளம் கொண்ட நம்முடைய அம்மாவை வணங்குவதற்காகவே வரும் நாளே 'அன்னையர் தினம்'. ஒவ்வொரு வீட்டிலும் நடமாடும் தெய்வமாக விளங்கும் நம்முடைய அம்மாவுக்கு இந்த நாளில் அன்போடு வாழ்த்துக்களையும் பகிர்ந்து மகிழ்ச்சிப்படுத்துவோம்.
Gowthami Subramani May 13, 2023
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அன்பை வெளிப்படுத்தும் ஒரே நபர் என்றால் அவர் நம் தாய் மட்டுமே. நம்மை ஈன்றெடுக்கும் போது, அவள் பெறும் வலியை விட, நம்மை இந்த உலகிற்குக் கொண்டு வர அவள் செய்யும் முயற்சியே பெரிது எனக் கருதி ஈன்றெடுப்பாள். அப்படிப்பட்ட நம் தாயைப் போற்றுவதற்கே ஆண்டுதோறும் மே மாதம் 14 ஆம் நாள் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தினத்தில் நாம் அன்னையர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.