Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image.

வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார். அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், மேஷ ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

மேஷம் குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! எந்த காரியத்தையும் முட்டிமோதியாவது சாதித்துவிடுவீர்கள். அனைத்து செயல்களிலும் முழு வேகத்துடன் ஈடுபடுவீர்கள். முன்கோபம் அதிகம் கொண்ட உங்களுக்கு போராட்ட குணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். உங்களை நம்பியவர்களுக்கு உதவி செய்வதில் வள்ளவர். மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. மேலும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்க ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் அமருகிறார். இந்த ஜென்ம குருவால் இதுவரை உங்களை மதிக்காமல் இருந்தவர்கள் அனைவருக்கும் உங்களின் மீது ஒரு மதிப்பு, மரியாதை ஏற்படும். 

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத்தினர் அனைவரும் உங்களின் பேச்சை கேட்டு செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். மேலும், இந்த குருப்பெயர்ச்சி பிறகு வெளியூர் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதாவது, இந்த ஜென்ம குரு காலத்தில் மனைவி, குடும்பம், பிள்ளைகளை பிரிந்திருக்க நிலை உண்டாகும். பணவரவு மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

குரு பகவான் உங்க ராசியின் 5ஆம் இடமான குலதெய்வ ஸ்தானம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், உங்க குலதெய்வத்தின் மூலமாக உங்க வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். பழைய பூர்வீக சொத்துக்கள் மீதான வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதமாக அமையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேர்வார்கள்.

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

மாணவர்களுக்கு சிறப்பான காலம் என்றால் இதுதான். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்க தொழில் சார்ந்த வேலை கிடைக்கப் பெறுவீர்கள். பின்னர், குரு பகவான் உங்க ராசியின் 7 ஆம் இடமான நட்பு ஸ்தானம், மனைவி ஸ்தானத்தை பார்ப்பதால், நீண்ட நாட்களாக நட்பாக பழகிய நட்பு காதலாக உருவெடுக்கும். ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெற்றோர்களின் சம்பதத்தோடு திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசியினருக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். சிலருக்கு மனைவி வழி சொத்துக்கள் கணவருக்கு வந்து சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் அரசாங்க வேலை மகன், மகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்